நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் ஏ.எச்.எம். லலித் அம்பேவல திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கண்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (13) காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குள் இரண்டு இளைஞர்கள் வழக்குகள் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமைமெயன இலங்கையில் உள்ள சட்ட நிபுணர்களின் தலைமை அமைப்பு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும்  முழுமையாக முடங்கியுள்ளது.

பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் நதிகளில் சடலங்கள் காணப்படுவது தொடர்கிறது. பிகாரின், பக்ஸர் மாவட்டத்தின் செளஸா வட்டாரத்தில் உள்ள செளஸா இடுகாட்டில் 71 உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்க பிபிசி முயன்றது.

கேள்வி: இந்த சடலங்கள் எங்கிருந்து வந்தன?

பதில்: இந்த உடல்கள் உத்தரபிரதேசத்திலிருந்து அடித்துவரப்பட்டவை என்று பக்ஸர் நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும், இறுதி சடங்கு நடத்த அதிக செலவு பிடிப்பதாலும், கொரோனாவுக்கு பயந்தும் உள்ளூர்வாசிகள்தான் சடலங்களை நதியில் போடுகின்றனர் என்றும் பிபிசி தொடர்பு கொண்ட பல உள்ளூர்வாசிகள், கூறுகிறார்கள்.

இது குறித்து நதிகள் தொடர்பான வல்லுனர் தினேஷ்குமார் மிஷ்ராவுடன் பிபிசி பேசியது. "சடலங்கள் எங்கிருந்து வந்தன என்று சொல்வது கடினம். இப்போது கங்கையில் தண்ணீர் குறைவாக உள்ளது. இது மழைக்காலமாக இருந்திருந்தால், சடலங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கும். யாருக்கும் தெரியவே வந்திருக்காது," என்று அவர் கூறினார்.

பாரம்பரியம்

"ஆனால் தகன இடத்திற்கு அருகே உள்ள நதியின் வளைவு பற்றி பக்ஸர் நிர்வாகம் சொல்வதில் விஷயம் இருக்கிறது. நதியின் வளைவின் வெளிப்புற விளிம்பில் நதி அரிப்பு ஏற்படுகிறது. உள் விளிம்பில் மண் குவிக்கப்படுகிறது. இது ஆற்றின் இயல்பான போக்கு. ஒரு சடலம் அல்லது மிதக்கும் ஏதோ ஒன்று உள்வட்டத்தில் இருந்தால், நதி சடலத்தை மண்ணைப் போல வெளிப்புறமாக கொண்டுசேர்க்கும்,"என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கேள்வி: சடலங்கள் நதிகளில் போடப்படும் பாரம்பரியம் உள்ளதா?

பதில்: பக்ஸரின் செளஸா வட்டாரத்திலிருந்து கங்கை ஆற்றில் சடலங்கள் மிதக்கும் விஷயம் வெளிவந்த பின்னர், இங்கே (பிகாரில்) சடலங்களை நதிகளில் போடும் பாரம்பரியம் இல்லை என்று பக்ஸர் நிர்வாகம் மே 10 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இது தொடர்பாக இந்துக்களின் சமயச் சடங்குகள் குறித்த நிபுணர் பிரபஞ்சன் பாரத்வாஜ் விளக்குகிறார். "பிகாரில் பெரும்பாலான இடங்களில் உடல் எரிக்கப்படுகிறது. ஆனால் பாம்பு கடி அல்லது தொழுநோய் போன்ற கொடிய நோய் காரணமாக இறப்பு ஏற்பட்டால் சடலம், தண்ணீர் நிரப்பப்பட்ட குடம் அல்லது வாழைமரத்தண்டுடன் சேர்த்து ஆற்றின் நடுவில் விடப்படுகிறது, "என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டாயம்

உத்தரபிரதேசத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் சடலங்களை ஆற்றில்விடும் பாரம்பரியம் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "பிகார் மற்றும் உ.பி.க்கு இடையே 'கர்மனாஷா' நதி பாய்கிறது. உ.பி.யில் கர்மனாஷா கரையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களில், சடலத்தின் வாயில் இறுதி அக்னியை போட்டு உடல் ஆற்றில் மிதக்கவிட்டுவிடும் பழக்கம் உள்ளது," என்று அவர் குறிப்பிடுகிறார்.

கேள்வி: உள்ளூர் மக்கள் சடலத்தை கட்டாயத்தின் பேரில் ஆற்றில் போடுகிறார்கள் என்றால் இதற்கான காரணம் என்ன?

பதில்: "முதல் விஷயம் என்னவென்றால், இந்த உடல்கள் உ.பி.யில் இருந்து வந்தவை. இப்போது உத்திரபிரதேசத்திலிருந்து பிகாருக்கு உடல்கள் வர முடியாதபடி ஆற்றில் இரண்டு இடங்களில் வலைகளை நிறுவியுள்ளோம்," என்று பக்ஸர் எம்.எல்.ஏ சஞ்சய் குமார் திவாரி தெரிவித்தார்.

தகனம் செய்வது மிகவும் செலவுபிடித்ததாக ஆகிவிட்டது என்று அவர் கூறுகிறார். "மரக்கட்டைகள் மற்றும் தகன பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன . இதற்கு முன்பு 40 கிலோவுக்கு 250 ரூபாயாக இருந்த விறகு விலை இப்போது .400 ரூபாயாக உயர்ந்துள்ளது. மரக்கட்டைகள், வறட்டி , வைக்கோல் போன்ற பொருட்களின் சப்ளையும் குறைவாகவே உள்ளது. கோவிட் மற்றும் கோவிட் அல்லாத நோயாளிகளும் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இடுகாடுகளில் ஊழலுக்கான வாய்ப்பே இல்லாதபடி நாங்கள் செய்துள்ளோம்," என்று கூறுகிறார் சஞ்சய் குமார்.

நீர்

கேள்வி: இது நதி நீரை பாதிக்குமா? மேலும், இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்: "இவை கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களாக இருந்தால், ஆற்றின் நீர் நிச்சயமாக பாதிக்கப்படும். நீரானது நோய்களை தன்னுடன் எடுத்துச் செல்லும். உடல்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்த நீரை சுத்திகரிப்பு செய்வதுகூட சாத்தியமில்லை. இந்த இடங்களிலிருந்து தண்ணீரை எடுத்து நிர்வாகம் ஏதேனும் பரிசோதனை செய்துள்ளதா என்பதும் ஒரு கேள்வி," என்று தினேஷ் மிஷ்ரா குறிப்பிட்டார்.

மறுபுறம், சுகாதார நிபுணரும், ஐ.எம்.ஏ பிகாரின் மூத்த துணைத் தலைவருமான டாக்டர் அஜய் குமார் இவ்வாறு கூறுகிறார்.

"இப்போது ஆற்றின் நீரை எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. நமக்காகவோ, விலங்குகளுக்காகவோ உபயோகிக்கக்கூடாது. வாய், மூக்கு, காதுகள் வழியாக கோவிட் வைரஸ் உள்ளே செல்கிறது. மக்கள் இந்த நீரைப் பயன்படுத்தினால், பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களுக்கு மேலதிகமாக கோவிட் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். "

நிர்வாகம்

கேள்வி: நிர்வாகம் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பதில்: "முதலில், மக்கள் நேரடியாக தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். குளிப்பது போன்றவற்றுக்கு அதை பயன்படுத்தக்கூடாது. நீர் பரிசோதனை உடனடியாக செய்யப்பட வேண்டும். மேலும் விலங்குகளை குளிப்பாட்ட ஆற்றுக்கு அழைத்துச்செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் விலங்குகளுக்கு நோய் ஏற்பட்டு அவை இறந்துவிட்டால் சிரமங்கள் மேலும் அதிகரித்துவிடும், "என்று தினேஷ் மிஷ்ரா கூறுகிறார்.

பதில்: " சடலங்கள் ஆற்றில் மிதக்கத் தொடங்கும் போது, அது ஒரு பயங்கரமான சூழ்நிலை. அது மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்தும். மரணம் தன்னைச்சுற்றி. இருப்பதாக உணர்வார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்தால் சமூகத்தில் சோகத்துடன் கூடவே இரக்கமற்ற தன்மையும் உருவாகும். ஒரு சமூகத்தில் இரக்கமற்ற தன்மை வரும்போது, யாருக்கும் உதவ அவர்கள் முன்வரமாட்டார்கள்," என்று 'மனோவேத்' பத்திரிகையின் ஆசிரியரும் மனநல மருத்துவருமான டாக்டர் வினய் குமார் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த முழு விஷயத்திலும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் முக்கியப்பங்கு வகிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். இது போன்ற சடலம் பற்றித்தெரிய வந்தவுடன், பஞ்சாயத்து மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் அதை உடனடியாக தகனம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கேள்வி: பிகார்-உ.பி. நதிகளில் இதுபோல காணப்படும் சடலங்கள், இந்த இரு மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சமூக குறியீடுகள் பின்தங்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறதா?

பதில்: இந்த கேள்வியை மூத்த பத்திரிகையாளர் தயாஷங்கர் ராயிடம் கேட்டோம். அவர் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தின் பலியாவைச் சேர்ந்தவர். பிகார் தலைநகரான பாட்னாவில்'ராஷ்டிரிய சஹாரா' செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

"பிகாரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. அதை ஒப்பிடும்போது உத்தரபிரதேசம் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் நீங்கள் அதை லக்னெள, என்.சி.ஆர் பகுதிகள், கான்பூர், அலகாபாத்தில் மட்டுமே பார்ப்பீர்கள். மற்ற எல்லா இடங்களிலும் உ.பி.யும் பிகார் போலவே உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கல்வி மற்றும் சுகாதார அமைப்பு உட்பட அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கல் காரணமாக அரசின் நிர்வாகக்கட்டுப்பாடு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சுடுகாடுகள் வரை ஊழல் ஏற்பட இதுவே காரணம்," என்று அவர் கூறினார்.

"இரு மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் கொரோனா சோதனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் முறையான பரிசோதனை அல்லது சிகிச்சை செய்துகொள்வதில்லை. இந்த நிலையில் இறப்பு ஏற்படும்போது, கோவிட் பயம் மற்றும் பலவீனமான பொருளாதார நிலை காரணமாக சடலங்கள் ஆற்றில் வீசப்படுகின்றன. இரு மாநிலங்களும் மக்கள் நலத்திட்டங்களை உறுதியுடன் செயல்படுத்தும் அவசியம் உள்ளது," என்று குறிப்பிடுகிறார் தயாஷங்கர் ராய்.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிகிச்சை பெறும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்தாக விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 2 சம்பவங்கள் நடந்தன. ஏக்ரே என்ற இடத்தில் யூதர் ஒருவர் அரேபியர்களால் தாக்கப்பட்டார் என்றும் பாட்யாம் என்ற இடத்தில் பாலஸ்தீனியர் ஒருவரை யூதர் கூட்டம் ஒன்று காரில் இருந்து இழுத்து வெளியே போட்டு தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து இருதரப்பு மோதல்கள் வலுத்து வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால், கட்டில் கிடைப்பதற்கு முன்பாகவே நோயாளிகள் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனை வாசலில் என்ன நடக்கிறது?

தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் இரு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃவ்ஸ் ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இதுவரையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிய முடிந்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி