செப்டம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் அல்லாத வகைகளின் பதிவு தேசிய எரிபொருள் கடவு முறைமையில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சிங்கள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை கொம்பனித்தெரு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு பாராளுமன்றில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 81 வாக்குகளால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும்,அந்த அறிக்கையின்படி, நிறுவனத்தின் அரசியலமைப்பை திருத்திய பின்னர் இரண்டு மாதங்களுக்குள் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த விளையாட்டு அமைச்சர் முடிவு செய்துள்ளார்.