1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்.


உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

24

எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி ஏப்ரல் 21, 1926 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார். 1952ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைந்த பின் அரசு பதவிக்கு வந்தவர் எலிசபெத். எலிசபெத் பிரித்தானியாவை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர்.

15

1952ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 25. தனது 21 வயதில் கிறீஸ் இளவரசர் பிலிப்பை அவர் மணந்து கொண்டார்.

எலிசபெத் ராணிக்கு 13 வயது இருக்கும் போதே அப்போது 18 வயதாக இருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்தார். இருவரும் நட்பாக பழக பின்னாளில் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பதின் பருவத்தில் முளைத்த அவர்களின் காதல் 7 தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்திருந்தது.

கடந்த 2021ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார். இளவரசரின் மரணம் ராணியை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.

6

மகாராணி இறப்பால் கொடி, பண நோட்டு, பொதுநலவாயம் என பிரித்தானியா சவால்களை எதிர்கொண்டுள்ளது.

பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட மகாராணி எனப் புகழ்பெற்ற எலிசபெத் இறப்பால் பிரிட்டன் ஸ்தம்பித்து இருந்தாலும், இதன் பிறகு பிரிட்டனில் ஏற்படவிருக்கக்கூடிய மாற்றங்கள் மிகவும் சவாலானவை. ராணியின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டன் எதிர்கொள்ள இருக்கும் நெறிமுறைகள் பொருளாதார சீர்க்குலைவை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பிலும் சரிவை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ராணியின் மரணத்துக்குப் பின் குறைந்தது 12 நாள்களாவது இங்கிலாந்து ஸ்தம்பித்துப் போய் இருக்கும். ராணியின் மரணம் வேலை நேரத்தில் நிகழ்ந்திருந்தால், மரியாதையின் அடையாளமாக லண்டனின் பங்குச் சந்தை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.

இவற்றைத் தாண்டி மகாராணியின் பெயர், உருவப்படம் என அச்சடிக்கப்பட்ட கொடிகள், பணத்தாள்கள், தேசிய கீதம், ஜெபம், ராயல் வாரண்டுகள் என அனைத்தையும் நீக்கி, புதிய மன்னனின் உருவத்தைப் பதிக்க அதிக நேரம் எடுக்கும்.

கொடிகள்: காவல் நிலையங்களின் வெளியில் ஏற்றப்படும் கொடி, கடற்படை கப்பலில் ஜெனரல் பயணம் செய்யும்போது பயன்படுத்தும் தரம், ராணுவ படைப்பிரிவுகள் என EIIR பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கொடிகள் மாற்றப்படும்.

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்: ராணியின் முகத்துடன் 4.5 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மொத்த மதிப்பு பவுண்டுகளில் 80 பில்லியன். இந்தத் தாள்களை புதிய மன்னரின் உருவப் படத்தைக் கொண்டு மாற்ற, சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிடிக்கும். நாணயங்களில் உள்ள ராணியின் படத்தையும் மாற்றியமைக்க வேண்டும். ராணியின் தலை பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கனடா, நியூசிலாந்து மற்றும் காமன்வெல்த்தின் பிற பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளன.

தேசிய கீதம் மற்றும் ஜெபங்கள்: தேசிய கீதத்தில் உள்ள, God save our gracious Queen” என்ற வார்த்தையை மாற்றி God save our gracious King” என மாற்றம் செய்யப்படும். அதேபோல பொது வழிபாட்டில், எங்கள் ராணியும் ஆளுநருமான, உமது தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியருமான எலிசபெத்தின் இதயத்தை ஆளும்படி கடவுளிடம் கேட்கிறோம். அவள் எல்லாவற்றுக்கும் மேலாக உமது பெருமையையும் மகிமையையும் தேடுவாள்’’ என பொது ஆயர் கூட்டத்தில் ஜெபிக்கப்படுவதும் மாற்றம் பெறலாம்.

 

ராணியை பற்றி சில சுவாரசிய தகவல்கள்

`ராணியின் பிறந்தநாள் எப்போது?’
ராணி எலிசபெத் 1926, ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தாலும், அவரின் பிறந்தநாள் ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் சனிக்கிழமைகளில்தான் கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட எந்த ஒரு தேதியும் அறிவிக்கப்படுவதில்லை. ஆக, ராணியின் பிறந்தநாள் என்று எந்த ஒரு குறிப்பிட்ட தேதியும் காலண்டரில் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் அந்நாட்டு அரசுதான் ராணியின் பிறந்தநாளை அறிவிக்கும். அதன்படியே கொண்டாட்டங்கள் அமையும்.

19

வீட்டிலேயே கல்வி..!
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைப்போல் பள்ளிக்கூடங்கள் செல்வதில்லை. இதனால் குழுவாக மற்ற மாணவ, மாணவிகளுடன் கல்வி கற்கும் அனுபவம் அவர்களுக்குக் கிட்டவில்லை. ராணி எலிசபெத்தும் அப்படியே. அவருக்கும் அவரின் தங்கை மார்கரெட்டுக்கும் வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது.

21

ஹியூமர்... மிமிக்ரி..!
ராணி இரண்டாம் எலிசபெத், எப்போதும், எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொள்ளும் நபராக அறியப்பட்டாலும், அவரை நன்கு அறிந்தவர்கள் அவரை அதிகம் நகைச்சுவை உணர்வுகொண்டவராக அறிவர். அவர் வேடிக்கையாகப் பேசுவதிலும், மிமிக்கிரி செய்யும் திறமையும்கொண்டவர்.கேண்டெர்பரியின் முன்னாள் பேராயர் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுமிக்கவராக இருப்பார்” என்றும், அவரின் இந்த குணம் பலர் அறிந்ததில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

28

ராணியின் மனதைக் கொள்ளைகொண்ட செல்லப்பிராணிகள்!
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு செல்லப்பிராணிகள் என்றால் அலாதிப் பிரியம். குறிப்பாக, கார்கி வகை நாய். இளவரசி டயானா முன்னர் இது குறித்துக் குறிப்பிடுகையில், செல்லப்பிராணிகள் ராணியின் நகரும் சிவப்புக் கம்பளங்களை போன்றவை. ஏனென்றால் அவை அவர் செல்லும் எல்லா இடங்களுக்கும் கூடவே செல்லும் காரணத்தால்” என்கிறார்.

`சொந்த வருமானத்துக்கு வரி செலுத்துகிறேன்!’
இரண்டாம் எலிசபெத் ராணியாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் 1992-ம் ஆண்டிலிருந்து வரிகளைச் செலுத்திவருகிறார் என்பது தகவல். 1992-ல் ராணியின் வார இறுதி இல்லமான விண்ட்சர் கோட்டை தீயினால் நாசமானபோது, அதைப் பழுது பார்ப்பதற்காக மில்லியன் கணக்கான பவுண்டுகள் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அவர் தனது தனிப்பட்ட வருமானத்துக்கு வரி செலுத்த தானாக முன்வந்து ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடம்பிடித்து பெற்ற ஓட்டுநர் பயிற்சி!
எலிசபெத் எப்போதும் மக்களுக்காக தனது பங்களிப்பைத் தர ஏதாவது செய்துகொண்டேயிருப்பார். இரண்டாம் உலகப்போர் சமயங்களில் தன்னுடைய பெற்றோர்களிடம் போராடி ஓட்டுநர் பயிற்சிபெற்றார். இதன் மூலம் ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஓட்டும் பயிற்சியையும் பெற்றார். சில மாதங்களில் அவர் ஜூனியர் கமாண்டர் ஆகும் வாய்ப்பையும் பெற்றார். இப்படி அவர் வாழ்நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பல. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ராணி எலிசபெத் அமைதியான முறையில் விடைபெற்றார்.

27

நீண்ட நாள்கள் ஆட்சி செய்து சாதனை!
1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர். எழுப்ச்து ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

26

இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்கும் சார்லஸ்

ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் சார்லஸ் ஏற்கிறார். இங்கிலாந்தின் மன்னரான சார்லஸ் சில சடங்குகளைக் கடந்துதான் அரியணையில் ஏற முடியும். அதற்கான சம்பிரதாயங்களில் முதலாவது, அவருக்கான அடைமொழியைத் தேர்வு செய்வது. அதில் சார்லஸ், பிலிப், ஆர்தர், ஜார்ஜ் என்ற நான்கு பெயர்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கலாம்.

மன்னர் சார்லஸின் மகன் இளவரசர் வில்லியம், அரியணைக்கு அடுத்த வாரிசாக இருந்தாலும், தானாகவே இளவரசராக மாறமாட்டார். அவர் தனது தந்தையின் மற்றொரு பட்டமான டியூக் ஆஃப் கார்ன்வால் என்ற பட்டத்தைப் பெறுவார். அவரின் மனைவி கேத்தரின் கார்ன்வால் டச்சஸ் என்றும் மன்னர் சார்லஸின் மனைவி ராணி கன்சார்ட் என்றும் அழைக்கப்படுவார். இவ்வாறான பெயர் மாற்றங்கள் முதலில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணிநேரத்தில், லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், அசெஷன் கவுன்சில் எனப்படும் சடங்கு அமைப்புக்கு முன்னால் சார்லஸ் அதிகாரப்பூர்வ மன்னராக அறிவிக்கப்படுவார். இந்த அசெஷன் கவுன்சிலில், கடந்த கால மற்றும் தற்போதைய மூத்த எம்.பி.க்கள், சில காமன்வெல்த் உயர் ஆணையர்கள் மற்றும் லண்டன் லார்ட் மேயர் ஆகியோர் இருப்பார்கள்.

மன்னராக அறிவிக்கும் இந்த சடங்கில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள், ஆனால் குறுகிய காலத்தில் இந்த அறிவிப்பு வெளியாவதால், இதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். கடைசியாக 1952ல் நடந்த அசெஷன் கவுன்சிலில் சுமார் 200 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, ராணி எலிசபெத்தின் மரணம் அசெஷன் கவுன்சிலின் லார்ட் பிரசிடென்ட்டால் அறிவிக்கப்பட்டு, ஒரு பிரகடனம் உரக்க வாசிக்கப்படும். அதில் முந்தைய மன்னரைப் பாராட்டி, புதிய அரசிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் வார்த்தைகள் வரிசையாக இருக்கும். அதன்பிறகு இந்த பிரகடனத்தில் பிரதம மந்திரி, கேன்டர்பரி பேராயர் மற்றும் லார்ட் சான்சிலர் உட்பட பல மூத்த பிரமுகர்கள் கையெழுத்திடுவர்.

மன்னராக அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து அசெஷன் கவுன்சில் மீண்டும் கூடும். அதில் மன்னரும் கலந்துகொள்வார். அதில் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடரும் ஒரு பாரம்பரிய நடவடிக்கை இருக்கும். அதாவது புதிய மன்னரால் செய்யப்பட்ட ஒரு பிரகடனம் இருக்கும். அந்த பிரகடனத்தில் ஸ்காட்லாந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதாக மன்னர் உறுதிமொழி எடுப்பார். அதன்பிறகு சார்லஸை புதிய மன்னராக அறிவிக்கும் பொதுப் பிரகடனம் செய்யப்படும்.

இது செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ஃப்ரைரி கோர்ட்டுக்கு மேலே உள்ள மேல்மாடத்தில் இருந்து கார்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் என்று அழைக்கப்படும் அதிகாரியால் செய்யப்படும். ஹைட் பார்க், லண்டன் டவர் மற்றும் கடற்படைக் கப்பல்களிலிருந்து துப்பாக்கி முழக்கங்கள் நடைபெறும். மேலும் சார்லஸை மன்னராக அறிவிக்கும் பிரகடனம் எடின்பர்க், கார்டிஃப் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய மொழிகளில் வாசிக்கப்படும். அதன்பிறகே முடிசூட்டு விழா நடைபெறும்.

ராணி எலிசபெத் மரணமடைந்திருப்பதால், சார்லஸ் மன்னராகப் பதவியேற்றவுடனே முடிசூட்டு விழா நடக்க வாய்ப்பில்லை. ராணி எலிசபெத் பிப்ரவரி 1952-ல் அரியணை ஏறினார், ஆனால் ஜூன் 1953 வரை அவருக்கும் முடிசூட்டப்படவில்லை. எனவே, மன்னர் சார்லஸுக்கும் முடிசூட்டு விழா தாமதமாகலாம். முடிசூட்டு விழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர் தான் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ் 40-வது மன்னர் ஆவார்.

இந்த முடிசூட்டு விழா கேன்டர்பரி பேராயரால் மேற்கொள்ளப்படுகிறது. விழாவின் இறுதியில், அவர் சார்லஸின் தலையில் 2.23 கிலோ எடை கொண்ட செயின்ட் எட்வர்ட்டின் கிரீடத்தை வைப்பார். இது 1661-ம் ஆண்டிலிருந்து உள்ள ஒரு தங்கக் கிரீடம். இது லண்டன் கோபுரத்தில் உள்ள மகுட நகைகளின் முக்கியப் பகுதியாகும். இது முடிசூட்டும் தருணத்தில் மன்னரால் மட்டுமே அணியப்படுகிறது. இந்த முடிசூட்டு விழா ஒரு அரசு விழாவாகக் கருதப்படுகிறது. அதற்கு அரசே பணம் செலவழிக்கிறது. புதிய மன்னர் , மக்கள் முன் முடிசூட்டி உறுதிமொழியை எடுப்பார். இந்த விழாவில் அவர் மன்னரானதற்கான அடையாளமாக உருண்டை மற்றும் செங்கோலைப் கேன்டர்பரி பேராயர் வழங்குவார்.

அதன்பிறகு2.4 பில்லியன் மக்களைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக சார்லஸ் பொறுப்பேற்பார். இவற்றில் 14 நாடுகளுக்கும், இங்கிலாந்திற்கும், மன்னராக அவர் கருதப்படுகிறார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி