மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தெளிவான முடிவில் இ.தொ.கா உள்ளதென்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்த தாமதமானால், உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படமுடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சீர்திருத்த குழுவில்  தானும் ஒரு அங்கத்தவன் என தெரிவித்த அவர், அதில் அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் அது கட்டாயமாக மலைய மக்களாகிய இந்திய வம்சாவளி மக்களை மாத்திரமே பாதிக்கும். அதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் ஜனநாயகம் செயலிழந்து  போய்விடும் என்றார்.

இன்று (15) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேர்ர்ரை சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேப்போல் அசேதன பசளையை நிறுத்துவது நல்ல விடயம் தான் .ஆனால் அதனை உடனடியாக நிறுத்தியதால் சில பாதிப்புகள் வரலாம் என தெரிவித்த அவர், உரப் பிரச்சினையால்  தேயிலை உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள், தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான தீர்வு கிடைப்பது அவசியம் என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி