Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுகாதார அமைச்சர் ஒழிந்திருக்காது சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

டிசம்பர் 5, 2020 • 2:24 PM

சுகாதார அமைச்சர் ஒழிந்திருக்காது சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
  • அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார துறையின் பணி தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. சுகாதார துறையினரும், முப்படையினரும் மற்றும் பொலிஸாரும் கொவிட்19 தடுப்பு நடவடிக்கையில் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர்.
  • மாத்தளையில் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் மற்றைய இடங்களுக்கும் வராமல் தடுத்து அரசாங்கம் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கேட்கின்றோம்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார துறையின் பணி தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. 

சுகாதார துறையினரும், முப்படையினரும் மற்றும் பொலிஸாரும் கொவிட்19 தடுப்பு நடவடிக்கையில் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொவிட் பரவலுக்கான குற்றச்சாட்டை சுகாதார ஊழியர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைகளில் தங்களின் சுகாதார பாதுகாப்புக்காக போதுமான வசதிகள் இல்லையென்றும், தமக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். மாத்தளையில் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் மற்றைய இடங்களுக்கும் வராமல் தடுத்து அரசாங்கம் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கேட்கின்றோம்.

இந்த நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென அந்த ஊழியர்களை கேட்பதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் சுகாதார அமைச்சருக்கென்று பொறுப்புள்ளது. அதன்படி அவர் ஒளிந்திருக்காது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...