Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி!

T

The Leader Desk

டிசம்பர் 5, 2020 • 5:56 AM

நாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவல்களை மறைக்க அதன் நிர்வாகம் முயற்சிப்பதாக உழைக்கும் மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது.
  • சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை கொரோனா தொற்று நோயை ஒழிப்பதில் நேரடி பங்களிப்பாளராக இருந்தபோதிலும், அதன் செயற்பாடுகளை நேரடியாக மேற்பார்வையிடுவதாகத் தெரியவில்லை என சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளை வெளிப்படுத்திய காரணத்திற்காக, சுவசெரிய சேவையில் பணியாற்றும் ஒரு ஊழியர், ஒருவர் நியாயமற்ற முறையில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தகவல்களை மறைக்க அதன் நிர்வாகம் முயற்சிப்பதாக உழைக்கும் மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது.

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை கொரோனா தொற்று நோயை ஒழிப்பதில் நேரடி பங்களிப்பாளராக இருந்தபோதிலும், அதன் செயற்பாடுகளை நேரடியாக மேற்பார்வையிடுவதாகத் தெரியவில்லை என சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

"இருப்பினும், இந்த நிறுவனம் தற்போதைய அமைச்சரவையின் கீழ் சுகாதார அமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் நீண்ட காலமாக சுகாதார அமைச்சுடன் தொடர்புபடாத ஒரு அமைச்சின் கீழ் தன்னிச்சையாக செயற்பட்டு வந்தது, எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழும், பழைய நிர்வாகத்திற்கு தேவைக்கேற்ப செயற்பட்டு வருவதாக தெரிகிறது."

இதைக் கருத்தில் கொண்டு, தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மயூமி பிரியங்கிகா வீரசிங்க, வை.பி.எம்.எல் சிரிவர்தன மற்றும் ஆர்.எம்.ஆர்.எஸ் ராஜநாயக்க ஆகியோரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையின் பிரச்சினைகள் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சருக்கு காணப்படுவதாகவும், இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமளிக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"இல்லையென்றால், தொழிற்சங்கங்களின் அடக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு நேரடி நடவடிக்கை எடுக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.”

இக்கடிதத்தில் "உழைக்கும் மக்கள் சக்தி" தொழிற்சங்க அமைப்புக் குழு சார்பாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர்கள் சில்வெஸ்டர் ஜெயகொடி, ரவி குமுதேஷ், ஜோசப் ஸ்டார்லின், கேசர கோட்டேகொட, லீனஸ் ஜயதிலகே, சிந்தக ராஜபக்ச, உதேனி திசாநாயக்க மற்றும் சிந்தக பண்டாரா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி! | Tamil Leader | We Lead the Nation