செய்திகள்
Showing page 1019 of 1201 (18,008 articles)

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்!
மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

தடுப்பு மையத்திற்கு நீதிபதிகள் செல்ல அனுமதிப்பதற்கு அரசாங்கம் எதிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுகதையால் சிறைக்கு அனுப்பப்பட்ட எழுத்தாளரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு சிறுகதையின் அடிப்படையில் தன்னை கைது செய்து தடுத்து வைத்தமை அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, விருது பெற்ற எழுத்தாளர் தாக்கல் செய்த மனு ஒக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள மதிப்புமிக்க நிலங்களையும் சொத்துக்களையும் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது! சுனில் ஹந்துன்நெத்தி
இலங்கை நாட்டையும், அதன் வளங்களையும், தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் விடாமல் நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி குறித்த அதன் கொள்கை மற்றும் செயல் திட்டம் குறித்து அரசாங்கம் பொறுப்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஜேவிபி இன்று வலியுறுத்தியுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தனது நெருங்கிய நண்பன்! ஆபத்தான நேரத்தில் நண்பனுக்கு வீடு வழங்கும் சந்திமால்!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரபல நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வீடு ஒன்று வழங்குவதாக பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்கள் வெளியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக கினிகத்ஹேன – ரஞ்சுலாவ பிரதேசத்திலுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பி.சி.ஆர் தவறு காரணமாகவா புதிய கொரோனா வகைகள் நாட்டிற்குள் வந்தன!
சீனாவால் தடைசெய்யப்பட்ட இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் வைத்தியசாலையின் கொரோனா தொற்றை கண்டறியும், தவறான ஆய்வக சோதனைகள் நாட்டில் கொடிய தொற்றுநோய்கள் பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் வீட்டில் இன்று கூட்டமைப்பினருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையை சர்வதேச சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பசிலின் முயற்சி!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (ஜூலை 14) ஏழு நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்திலும் பொலிசாரின் எதிர்ப்பு!
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொருட்களின் விலையைக் குறைக்கக்கோரி வடக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும்,பொலிசார் குளப்பம் விலைவித்துள்ளனர்.'புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிச கட்சி'

ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 30 பேர் மாயம்!
ஜெர்மனியில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை அடுத்து 30 பேர் காணாமல் போயுள்ளனர்.ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதில், மழையால் நேற்றிரவு வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது.

ஆர்ப்பாட்டத்தை தடுக்க கேப்பாப்புலவை சூழ பலத்த பாதுகாப்பு!
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸார், விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் கைதுகள் தொடரும்! சரத் வீரசேகர
சரத் வீரசேகர போராட்டங்கள் அலையாக திரண்டுள்ளமையின் நோக்கத்தை நன்கு அறிவோம். சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமையவே போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் தகவள்கள் குறித்து சுகாதாரத் துறை மீது சவேந்திர சில்வா குற்றச்சாட்டு!
கொவிட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் பேரினது தகவல்களை, கணினியல் பதிவதற்காக சுகாதாரத் துறை இராணுவத்திற்கு வழங்காமையால் அந்த நபர்களின் தரவுகளில் பிரச்சினை தோன்றியுள்ளதாக இராணுத் தளபதி சுகாதாரத் துறையை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸ் துறைக்கு பொறுப்பான ரியர் அட்மிரலிடம் ஆசிரியர் சங்கத் தலைவர் சவால்!
கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் போராட்டங்களை நடத்திய தன்னையும் மற்றவர்களையும், தடுத்து வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணத்தை வெளிப்படுத்துமாறு

