Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்!

T

The Leader Desk

ஜூலை 16, 2021 • 9:33 AM

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கம் வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அதற்கும் முன்பு 2018ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்தபோது கீழே விழுந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
  • சுரேகா சிக்ரி, 1978ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான 'கிசா குர்சி கா' என்ற படத்தில் அறிமுகமானார்.
  • ம் ஆண்டு வெளியான 'தமஸ்', மற்றும் 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ' என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
எழுத்து அளவு:

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கம் வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கும் முன்பு 2018ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்தபோது கீழே விழுந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது.

சுரேகா சிக்ரி, 1978ம் ஆண்டு வெளியான அரசியல் திரைப்படமான 'கிசா குர்சி கா' என்ற படத்தில் அறிமுகமானார். அத்துடன், ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிளும், தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', மற்றும் 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ' என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

2008ம் ஆண்டில் 'பாலிகா வாது' என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருது பெற்றார். இந்தி நாடக அரங்குகளில் அவரது பங்களிப்புக்காக 1989ல் சங்கீத நாடக அகாடமி விருது வென்றார். மேலும், 64 வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதிற்கு சுரேகா சிக்ரி பரிந்துரைக்கப்பட்டார்.

சுரேகா சிக்ரி மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி மரணம்! | Tamil Leader | We Lead the Nation