Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தனிமைப்படுத்தல் கைதுகள் தொடரும்! சரத் வீரசேகர

T

The Leader Desk

ஜூலை 14, 2021 • 5:18 PM

தனிமைப்படுத்தல் கைதுகள் தொடரும்! சரத் வீரசேகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது.
  • கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோளிய மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல விடயங்களையும், முக்கிய பண்டிகைகளையும் கொண்டாடாமல் தியாகம் செய்துள்ளார்கள்.
எழுத்து அளவு:

ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது. பொது மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

ஆகவே தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும். என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் தற்போது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்கள்.

போராட்டம் அலை போல் திரண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். பேச்சு சுதந்திரம், மற்றும் ஒன்று கூடல் ஜனநாயக உரிமையாக காணப்படுகிறது. இதனை இவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோளிய மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை நாமும் தற்போது எதிர் கொண்டுள்ளோம்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் கடந்த வாரம் நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணான வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

பொது சுகாதார சேவை அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். .இதனை தவறு என எவராலும் குறிப்பிட முடியாது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல விடயங்களையும், முக்கிய பண்டிகைகளையும் கொண்டாடாமல் தியாகம் செய்துள்ளார்கள்.

பண்டிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் எவரும் வீதிக்கிறங்கி போராடவில்லை.தற்போதைய போராட்டங்கள் குறுகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.

போராட்டகாரர்கள் எல்லை மீறி செயற்பட்டதன் காரணமாகவே பொலிஸார் அவர்களை கைது செய்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் போராட்டத்தை அடக்கிய வகையில் நாம் செயற்படவில்லை.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டமை சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே இடம் பெற்றது. ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஒட்டு மொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. தனிமைப்படுத்தல் சட்டம் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படும். என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனிமைப்படுத்தல் கைதுகள் தொடரும்! சரத் வீரசேகர | Tamil Leader | We Lead the Nation