காலை விழித்தெழுந்ததும் சுடச்சுட ஒரு கப் தேநீரை இரசிக்கும் பலர், தாங்கள் அறியாமலேயே தினசரி தமது உடலில் சேர்த்துக் கொள்வது கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்களே என சர்வதேச உணவு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாரம்பரிய காகிதங்கள் அல்லது தாவர நார்ப்பொருட்களுக்குப் பதிலாகச் சில வர்த்தக நாமகங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வலை போன்ற தேநீர் பைகள் (Plastic mesh tea bags) கொதிநீரில் இடும் போது நுண்ணிய துகள்களாக உடைந்து போவதே இதற்குக் பிரதான காரணமாகும்.
அறிவியல் துறையின் முன்னணி சஞ்சிகையான 'npj Science of Food' இல் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்த வலைப் பகுதியிலிருந்து புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மற்றும் ஹார்மோன் சமநிலைக் குலைவை ஏற்படுத்தக்கூடிய பல இரசாயனக் கலவைகள் வெளியிப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான நுண்துகள்கள் கொதிநீரில்!
ஆராய்ச்சியாளர்கள் துருக்கியின் சந்தைகளில் இருந்து பெற்றுக் கொண்ட பிளாஸ்டிக் தேநீர் பைகளை 95 பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலுள்ள கொதிநீரில் மூன்று நிமிடங்கள் வைத்து அவதானித்துள்ளனர். அப்போது ஒரு தேநீர்க் கோப்பையிலிருந்து 555 முதல் 2,498 வரையிலான நுண் பிளாஸ்டிக் துகள்கள் வெளிவருவது கண்டறியப்பட்டது.
இங்கு 100 மைக்ரோமீட்டரை விடப் பெரிய துகள்கள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளன. இதைவிட மிகவும் சிறிய துகள்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
ஹார்மோன் செயற்பாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்
பிளாஸ்டிக் நார்களுடன் சேர்த்து, அவற்றை நெகிழ்வுத் தன்மையாக்குவதற்காக உற்பத்திச் செயற்பாட்டின் போது சேர்க்கப்படும் பிபிஏ (Bisphenol A - BPA) மற்றும் மற்றும் சில பிளாஸ்டிசைசர்கள் (Plasticizers) தேநீரில் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA) பரிந்துரைக்கும் தினசரி அதிபட்ச BPA எல்லையில் 4.55% முதல் 21.70% வரையிலான தொகையை ஒரேயொரு பிளாஸ்டிக் தேநீர் பைக் கோப்பையிலிருந்தே உடல் உறிஞ்சிக் கொள்ள முடியும்.
இந்நிலை குறிப்பான கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களின் அக ஹார்மோன் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான எச்சரிக்கையாகும்.
பாரம்பரிய தேயிலை எவ்வளவு பாதுகாப்பானது?
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அற்ற சாதாரணத் தேயிலைகளில் (Bulk tea) இத்தகைய உயர் இரசாயனச் செறிவு காணப்படுவதில்லை. சாதாரண தேயிலை 2 கிராம் உள்ள கோப்பையில் காணப்பட்டது 0.3 முதல் 2.4 வரையிலான மிகவும் அற்பமான நுண் பிளாஸ்டிக் துகள் அளவாகும்.
தொழிற்சாலை இயந்திரங்கள், போக்குவரத்துப் பொதிகள் மற்றும் வளிமண்டலத் தூசு என்பவற்றின் ஊடாகவே அந்தச் சிறிய துகள்கள் தேயிலையுடன் சேர்வதாக ஆய்வு காட்டுகிறது.
இதனால் தேநீரை வடிகட்டுவதற்கு முன்னர் சாதாரண குளிர்ந்த நீரால் தேயிலையைக் லேசாகக் கழுவி விடுவதன் மூலம் சுற்றாடலிலிருந்து சேரும் தூசுகளை அகற்றிக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தினசரி பயன்பாட்டிற்கான எளிய தீர்வு
-
நவீன வசதிக்காகச் சந்தைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் வலை போன்ற தேநீர் பைகளை முழுமையாகத் தவிர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாகும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
-
பிளாஸ்டிக் வலைப் பொதிகளுக்குப் பதிலாகச் சாதாரண உலர்ந்த தேயிலையைப் பயன்படுத்துங்கள்.
-
தேநீரை வடிகட்டிக் கொள்வதற்காக மண், கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகு (Stainless steel) வடிகட்டிகளை மட்டுமே தெரிவு செய்யுங்கள்.
-
காகிதத்தால் தயாரிக்கப்படும் பாரம்பரிய தேநீர் பைகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றில் பிளாஸ்டிக் பூச்சுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நம்பகமான மூலங்கள்:
-
Medical Xpress அறிவியல் ஆராய்ச்சி அறிக்கை: Plastic tea bags are releasing BPA, plasticizers and microplastics
-
YouTube காணொளி விசாரணை: Are Tea Bags Toxic? Microplastics in Your Morning Cup


