Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கொழும்பிலுள்ள மதிப்புமிக்க நிலங்களையும் சொத்துக்களையும் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது! சுனில் ஹந்துன்நெத்தி

T

The Leader Desk

ஜூலை 15, 2021 • 4:08 PM

கொழும்பிலுள்ள மதிப்புமிக்க நிலங்களையும் சொத்துக்களையும் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது! சுனில் ஹந்துன்நெத்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இந்த நாட்டின் குடிமக்கள், வணிக சமூகம் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரிமை உண்டு என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
  • இந்த சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • முக்கியமான அரச வளங்களை டொலர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த தற்காலிக தீர்வுகள் இந்த நெருக்கடியை தீர்க்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இந்த நாட்டின் குடிமக்கள், வணிக சமூகம் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரிமை உண்டு என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

முக்கியமான அரச வளங்களை டொலர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த தற்காலிக தீர்வுகள் இந்த நெருக்கடியை தீர்க்காது என்றும் அவர் கூறியுள்ளார். நாடு கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இது அத்தியாவசிய இறக்குமதிகள் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்நிய செலாவணியைக் கண்டுபிடிப்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் அந்நிய செலாவணி நெருக்கடி இல்லை என்று ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். எனினும் அந்நிய செலாவணி நெருக்கடியால் எரிபொருள் கொள்வனவு, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவது என்பன ஆபத்தில் உள்ளன என்று ஹதுன்னெத்தி கூறினார்.

இந்த சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதன் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை அரசாங்கம் தெளிவாக விளக்க வேண்டும்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய நிதியமைச்சர் அடுத்த சில மாதங்களுக்குள் இந்த நெருக்கடியை தீர்க்கப்போகிறார்.

திருகோணமலை எண்ணெய் பண்ணை, மின் உற்பத்தி, எரிபொருள் வழங்கல் போன்ற முக்கியமான அரச வளங்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.

செலம்பிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் கொழும்பில் மதிப்புமிக்க நிலங்களையும் சொத்துக்களையும் விற்பனை செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...