Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு USAID தொடர்ந்து ஆதரவளிக்கும்': ஜனாதிபதியிடம் சமந்தா பவர் உறுதி

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2023 • 6:48 AM

'இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு USAID தொடர்ந்து ஆதரவளிக்கும்': ஜனாதிபதியிடம் சமந்தா பவர் உறுதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியூயோர்க் சென்றுள்ளார்.
  • இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் (21) அமர்வில் தமது விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
  • வணிக வட்டமேசைக் கலந்துரையாடலில் 40 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வணிகர்கள் இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள The Pierre Taj எனும் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சமந்தா பவர் ஆகியோரிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு USAID வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின் போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுருக்கமான விளக்கமொன்றை முன்வைத்த ஜனாதிபதி அதன் வெற்றிகரமான முடிவுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு USAID தொடர்ந்து ஆதரவளிக்கும் அதேவேளையில் தேவையான நிபுணத்துவத்தையும் வழங்கும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியூயோர்க் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் (21) அமர்வில் தமது விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கில் ''இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்'' எனும் தலைப்பில் உயர்மட்ட வர்த்தக வட்ட மேசை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக சபை மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
வணிக வட்டமேசைக் கலந்துரையாடலில் 40 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வணிகர்கள் இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...