Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

SJB தேசிய கொள்கையை வகுப்பதற்கான கலந்துரையாடல்

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2023 • 11:25 AM

SJB தேசிய கொள்கையை வகுப்பதற்கான கலந்துரையாடல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆழமாக கலந்துரையாடி பின் ஆலோசனைகளை பெறுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை வர்த்தக சம்மேளனத்தை சந்தித்தது.
  • எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வர்த்தக சம்மேளனத்திற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
  • இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையும் துறைசார் பிரதானிகளும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான கொள்கை ரீதியான தேவைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.
எழுத்து அளவு:

ஆழமாக கலந்துரையாடி பின் ஆலோசனைகளை பெறுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை வர்த்தக சம்மேளனத்தை சந்தித்தது.

கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவின் உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலாநிதி ரொஹான் பல்லேவத்த ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையும் துறைசார் பிரதானிகளும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான கொள்கை ரீதியான தேவைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் துறைசார் பிரதானிகளால், கொள்கை துறையின் ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

ஒவ்வொரு துறைசார் பிரதானிகளிடமிருந்தும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவை எதிர்கால கொள்கைகளின் ஒரு பகுதியாக கருதும் படியுமாக அமைய முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வர்த்தக சம்மேளனத்திற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்னும் ஆழமான கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்க எதிர்காலத்தில் துறைசார் பிரதானிகளுடன் மேலும் தொடர்புகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான வணிகத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள சக்திஅரசாங்கத்தில், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் தரவுகள் மற்றும் ஆதாரங்களால் இயக்கப்படும் கொள்கை நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படும்.

இலங்கை வர்த்தக சம்மேளனமானது, இலங்கையின் முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதோடு, இந்த செயற்பாட்டில் சம்மேளனம் வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டுகிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...