Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

MTFE மீது நீதிமன்றம் தடை உத்தரவு - தலைவர் ஒருவர் தப்பியோட்டம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2023 • 3:11 AM

MTFE மீது நீதிமன்றம் தடை உத்தரவு - தலைவர் ஒருவர் தப்பியோட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.
  • இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்புள்ளதால், அவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பெறுவது பொருத்தமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் விளைவாக, விசாரணை அதிகாரிகள் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் விளைவாக, விசாரணை அதிகாரிகள் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இன்று அதிகாலை துபாய்க்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரமிட் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழும் விசாரணைகளை ஆரம்பிப்பது உசிதமானது என மத்திய வங்கி முன்னதாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்புள்ளதால், அவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பெறுவது பொருத்தமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

MTFE SL குழுமம் தற்போது நாட்டின் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் மேற்படி நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் கீழ் நிறுவனத்தின் செயற்பாடுகள் உள்ளதாக நம்பும் தகவல்கள் வௌியாகியுள்ளதாகவும்  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் நாங்கள் வினவியபோது, இந்த நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என ​​இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கிடையில், MTFE SL குழுமம், இந்த ஆண்டுக்கான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அனுசரணையாளர்களாக இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தொடர்பில் இன்று தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

MTFE மீது நீதிமன்றம் தடை உத்தரவு - தலைவர் ஒருவர் தப்பியோட்டம்! | Tamil Leader | We Lead the Nation