Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புலம்பெயர்வு வள நிலையத்தை (Migration Resource center) அமைப்பதற்கு நியூசிலாந்தின் முழுமையான ஒத்துழைப்பு - மூன்று ஆண்டுகள் வரை ஆதரவு வழங்கவும் இணக்கம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2023 • 9:25 AM

புலம்பெயர்வு வள நிலையத்தை (Migration Resource center) அமைப்பதற்கு நியூசிலாந்தின் முழுமையான ஒத்துழைப்பு - மூன்று ஆண்டுகள் வரை ஆதரவு வழங்கவும் இணக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது.
  • இந்த நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மூன்று வருட காலத்திற்கு நிதி உதவி வழங்கவும் நியூசிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
  • இதுதொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அமைச்சருக்கும் ,நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர் உயர்ஸ்தானிகர் Andrew Traveller க்கும் இடையில் இன்று காலை இடம்பெற்றது.
எழுத்து அளவு:

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது.
இதுதொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அமைச்சருக்கும் ,நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதி உயர் உயர்ஸ்தானிகர் Andrew Traveller க்கும் இடையில் இன்று காலை இடம்பெற்றது.
இந்த நிலையத்தை அமைப்பது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால், சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
இந்த நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் மூன்று வருட காலத்திற்கு நிதி உதவி வழங்கவும் நியூசிலாந்து இணக்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான புலம்பெயர்வு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் இதன் ஊடாக செயல்படுத்தப்படுவதுடன் மனித கடத்தல் மற்றும் முறையற்ற புலம்பெயர்வுகளைத் தடுப்பதில் இந்த நிலையத்தின் ஊடாக முக்கிய பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும். இந்த வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் படிப்படியாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...