Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை!

T

The Leader Desk

நவம்பர் 11, 2023 • 2:34 AM

LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
  • இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...