Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

JEDBஇல் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

T

The Leader Desk

அக்டோபர் 5, 2023 • 4:50 PM

JEDBஇல் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இக்கலந்துரையாடலில் JEDB பெருந்தோட்ட நிறுவனத்திடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
  • தோட்ட பகுதியில் காணப்படும் லயின் குடியிருப்புகளில் சரிந்து விழும் மரங்களை வெட்டத் தொடங்குதல்.
  • ஒவ்வொரு நிருவையிலும் சாதாரண நாட்களில் 1 கிலோ நிறுவை குறைப்பு மற்றும் மழை நாட்களில் 2 கிலோ நிறுவை குறைப்பும்.
எழுத்து அளவு:

JEDB நிறுவனத்திற்குட்பட்ட கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை தோட்டத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து JEDB தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் JEDB பெருந்தோட்ட நிறுவனத்திடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

  1. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு EPF கொடுப்பனவு வழங்கும் வரை விவசாய பயிர்ச்செய்கைக்கான காணி வழங்கப்படும்
  2. தோட்டத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும்.
  3. நிலுவையில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு உரமிடுதல்.
  4. தோட்ட நிர்வாகத்தினால் அறவிடப்படும்


தொழிலாளர் கடன் தொகை மீள
செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், வட்டித் தொகையை தோட்ட நிர்வாகம் செலுத்த வேண்டும்.

  1. தோட்ட கூட்டுறவு சங்க கணக்குகளை தோட்ட தொழிலாளர்களுக்கு சமர்ப்பித்தல்.
  2. தற்காலிக நிவாரணத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் EMA பெறுதல்.
  3. தோட்ட பகுதியில் காணப்படும் லயின் குடியிருப்புகளில் சரிந்து விழும் மரங்களை வெட்டத் தொடங்குதல்.
  4. தோட்ட அலுவலகத்தில் தமிழ் பேசும் உத்தியோகஸ்தர் நியமித்தல்.
  5. ஒவ்வொரு நிருவையிலும்


சாதாரண நாட்களில் 1 கிலோ நிறுவை குறைப்பு மற்றும் மழை நாட்களில் 2 கிலோ நிறுவை குறைப்பும்.

  1. தூர இடங்களில் காணப்படும் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி புதிய கழிவறைகள் நிர்மாணம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த JEDB பெருந்தோட்ட நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா உப தலைவர் பரத் அருள்சாமி, உபத் தலைவர் ராஜாமணி மற்றும் தொழில்துறை உறவு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

JEDBஇல் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Tamil Leader | We Lead the Nation