சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.
இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.
நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி ; IMF வெளியிட்ட தகவல்
T
The Leader Desk
ஜூலை 8, 2025 • 4:40 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.
- சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

