Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ICCயின் தடை: அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலைமையை சரி செய்யலாம்’

T

The Leader Desk

நவம்பர் 11, 2023 • 3:59 AM

‘ICCயின் தடை: அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலைமையை சரி செய்யலாம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அலட்சியத்தால் இது நடந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக, 4 முதல் 5 மாதங்களாக பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தும், நல்ல பதில் கிடைக்கவில்லை.
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் உஸ்மான் இலங்கை வந்த போது ஜனாதிபதியை கூட சந்தித்து இந்த நிலைமையை விளக்கினார்.
எழுத்து அளவு:

அலட்சியத்தால் இது நடந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​இலங்கை கிரிக்கெட்டுக்கு தேவையற்ற அழுத்தங்களைச் செலுத்தினால் கிரிக்கெட் தடை விதிக்கப்படும் என எச்சரித்ததாக கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.

“இது மிகவும் சோகமான நிலை. இது திடீரென்று ஏற்பட்ட நிலை அல்ல. இது தொடர்பாக, 4 முதல் 5 மாதங்களாக பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தும், நல்ல பதில் கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் உஸ்மான் இலங்கை வந்த போது ஜனாதிபதியை கூட சந்தித்து இந்த நிலைமையை விளக்கினார்.

“தற்போது இந்த நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் இன்று இலங்கையின் நிலைமையை முழு உலகமும் அறிந்து கொண்டுள்ளது. இது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் மிக மோசமான நிலைக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலைமையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘ICCயின் தடை: அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலைமையை சரி செய்யலாம்’ | Tamil Leader | We Lead the Nation