Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் இல்லையென நிரூபித்தால் மீண்டும் ICCக்குள் நுழைய வாய்ப்பு

T

The Leader Desk

நவம்பர் 11, 2023 • 2:41 AM

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் இல்லையென நிரூபித்தால் மீண்டும் ICCக்குள் நுழைய வாய்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.
  • இவற்றை அவதானித்து வந்த ஐ.சி.சி., தற்போது தனது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • இலங்கைக் கிரிக்கெட் சபை அண்மைய சில வருடங்களாக பெரும் அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
எழுத்து அளவு:

, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் சபை அண்மைய சில வருடங்களாக பெரும் அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதனால்தான் இலங்கைக் கிரிக்கெட் அணி படு பாதாளத்துள் விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடுகள் உள்ளன என்பதை, முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன மற்றும் லசித் மலிங்க ஆகியோர் தாம் விளையாடிய காலப்பகுதியில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால் அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளும் நேர்ந்தன. இந்நிலையில், தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, இலங்கைக் கிரிக் கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது என்பதை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் சாடி வந்த அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் விவகாரம் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் வரை சென்றிருந்தது.

இவற்றை அவதானித்து வந்த ஐ.சி.சி., தற்போது தனது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட்டின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. நேற்றுக் கூடிக் கலந்தாலோசித்தது.

அதன்படி, ஐ.சி.சியின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கைக் கிரிக்கெட், தமது கடமைகளைக் கடுமையாக மீறுகிறது எக ஐ.சி.சி. தீர்மானித்தது.

இதையடுத்து, இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியும் உள்ளது.

அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் எனவும் ஐ.சி.சி. வலியுறுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...