Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கைதி அலெக்ஸ் மரணத்துக்கு ‘Homicide’ காரணம்: பொலிஸாரைக் கைதுசெய்ய உத்தரவு

T

The Leader Desk

நவம்பர் 24, 2023 • 12:48 PM

கைதி அலெக்ஸ் மரணத்துக்கு ‘Homicide’ காரணம்: பொலிஸாரைக் கைதுசெய்ய உத்தரவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவரான நாகராசா அலெக்ஸின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்கா எனக் கண்டறியும் விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் அ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
  • உயிரிழந்தவருடன் உடன் இருந்த மற்றைய சந்தேகநபரும் மூன்றாவது சாட்சியுமானவரைப் பொலிஸார் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்லக் கோருவதனால் இரு சட்டத்தரணிகள் சகிதம் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டது.
  • இதேநேரம் அந்த மரண விசாரணை வழக்கில் உயிரிழந்நவர் சார்பில் 12 பெண் சட்டத்தரணிகள் உட்பட 36 சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.
எழுத்து அளவு:

(வயது 26) மரணம் இயற்கையானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என அறிவித்த யாழ்ப்பாணம் நீதவான், உயிரிழந்த நபருடன் கைதான மற்றையவர் அளித்துள்ள சாட்சியத்தில் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம் காண்பதற்குரிய அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவரான நாகராசா அலெக்ஸின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்கா எனக் கண்டறியும் விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் அ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே நீதவான் தனது கட்டளையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர், உயிரிழந்த அலெக்ஸுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய சந்தேகநபர் மற்றும் ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர் ஆகியோருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இவற்றின் அடிப்படையில் இடைக்கால கட்டளையிட்ட நீதிவான் இயற்கையானது அல்லாமல் ஏற்படுத்தப்பட்ட மனித உயிர்ப் போக்குக்குக் காரணமானவர்கள் என அவருடன் இருந்த மற்றைய சந்தேகநபரால் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறப்பட்ட மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர் களை இனம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான கட்டளையை நீதிமன்றப் பதிவாளரை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

உயிரிழந்தவருடன் உடன் இருந்த மற்றைய சந்தேகநபரும் மூன்றாவது சாட்சியுமானவரைப் பொலிஸார் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்லக் கோருவதனால் இரு சட்டத்தரணிகள் சகிதம் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டது.

இதேநேரம் அந்த மரண விசாரணை வழக்கில் உயிரிழந்நவர் சார்பில் 12 பெண் சட்டத்தரணிகள் உட்பட 36 சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இன்றைய இந்த வழக்கு விசாரணை யின்போது யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...