Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

குழந்தைகளுக்கு ஒரு இலக்கத்தை வழங்க GMOA முன்மொழிவு!

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2021 • 2:05 PM

குழந்தைகளுக்கு ஒரு இலக்கத்தை வழங்க GMOA முன்மொழிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, தடுப்பூசி போடப்பட்ட சிறுவர்களுக்கு அடையாள அட்டை இலக்கமொன்று இல்லாமை கவனத்தை ஈர்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
  • அந்த இலக்கம் அடங்கிய அடையாள அட்டையை 16 வயதில் அல்லது அதற்கு முன்னதாகவே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தாய்நாட்டில் குடியுரிமை பற்றிய உணர்வு ஏற்படும் 2.
  • சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் அடிமைத்தனத்தின் விளைவுகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க முடியும் 3.
எழுத்து அளவு:


சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, தடுப்பூசி போடப்பட்ட சிறுவர்களுக்கு அடையாள அட்டை இலக்கமொன்று இல்லாமை கவனத்தை ஈர்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

பிறக்கும் போது குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதற்கான பரிந்துரையை குடும்ப சுகாதார பணியகம் முன்னர் சமர்ப்பித்ததாகவும் தொழில்நுட்பக் குழு குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்காக பிறப்பிலேயே தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டுமென,  புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி பரிந்துரைத்துள்ளதாக,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கம் அடங்கிய அடையாள அட்டையை 16 வயதில் அல்லது அதற்கு முன்னதாகவே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறக்கும் போது குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன் ஐந்து நன்மைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


1. தாய்நாட்டில் குடியுரிமை பற்றிய உணர்வு ஏற்படும்


2. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் அடிமைத்தனத்தின் விளைவுகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க முடியும்


3. நாடு முழுவதும் உள்ள சிறுவர்களுக்கான சீரான சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அடையாள முறையாகப் பயன்படுத்த முடியும்.


4. சிறுவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரகசிய அடையாள இலக்கமாக இதனைப் பயன்படுத்த முடியும்.


5. வரையறுக்கப்பட்ட வளங்களை சிறுவர்களுக்கு வழங்குவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.


குறித்த தீர்மானங்கள் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பை எவ்வாறு உறுதி என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...