Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

GMOA எதிர்ப்பைத் தொடர்ந்து ஃபைசர் ராணுவத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை!

T

The Leader Desk

செப்டம்பர் 2, 2021 • 5:56 AM

GMOA எதிர்ப்பைத் தொடர்ந்து ஃபைசர் ராணுவத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவம் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்த பின்னர் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
  • வைத்தியர் டி சொய்சா, "காலியில் அஸ்ட்ரசெனிக்கா ஊசி போடப்பட்டபோது எழுந்த அதே பிரச்சனை சிலாபத்திலும் எழுந்துள்ளது.
  • சுகாதாரத் துறை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட சிலாபத்தில் உள்ள கொகாவில மையத்தில் ஃபைசர் தடுப்பூசி வெளியாட்களுக்கு வழங்கப்பட்டதாக வெளிவந்த பின்னர் இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவம் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்த பின்னர் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட சிலாபத்தில் உள்ள கொகாவில மையத்தில் ஃபைசர் தடுப்பூசி வெளியாட்களுக்கு வழங்கப்பட்டதாக வெளிவந்த பின்னர் இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

பைசர் தடுப்பூசியை ராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் வைத்தியர் நவின் டி சொய்சா, "சிலாபத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அதை திருத்துவதைத் தவிர்த்து, பைசர் ஊசியை ராணுவத்திடம் மட்டும் ஒப்படைப்பது தவறு.

வைத்தியர் டி சொய்சா, "காலியில் அஸ்ட்ரசெனிக்கா ஊசி போடப்பட்டபோது எழுந்த அதே பிரச்சனை சிலாபத்திலும் எழுந்துள்ளது. அப்படியானால் அஸ்ட்ராசெனிக்கா ஊசியின் முழுப் பொறுப்பும் இராணுவத்திற்கு ஏன் கொடுக்கவில்லை?"

விசாரணை இடம் பெற்றுவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA),சுகாதார அமைச்சே தடுப்பூசிக்கு பொறுப்பு என்று சுட்டிக்காட்டி, ஃபைசர் தடுப்பூசியை இராணுவத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வைத்தியர் நவீன் டி சொய்சா, "தடுப்பூசி செயல்முறை இராணுவமயமாக்கப்பட்டிருப்பதால் அது அவர்களுக்கு மேலதிகமாக ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் செயலாகும் என்று கூறினார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, "பைசர் ஊசி இராணுவத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை."

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் கோவக்ஸ் அறக்கட்டளை மூலம் 100,000 டோஸ் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசியை இலங்கை பெற்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...