Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கோட்டாவின் இயற்கை உரம் FAIL! இரசாயன உரத்திற்கு அனுமதி!

T

The Leader Desk

நவம்பர் 21, 2021 • 5:48 PM

கோட்டாவின் இயற்கை உரம் FAIL! இரசாயன உரத்திற்கு அனுமதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்படி அனுமதியானது பெரும்போகத்தில் விவசாய செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் உதித் கே.
  • எனினும், நாட்டில் அதன்பின்னர் ஏற்பட்ட உர நெருக்கடியினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதையும் நிறுத்தினர்.
  • Udith K.Jayasinghe) ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மேற்படி அனுமதியானது பெரும்போகத்தில் விவசாய செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க (Prof. Udith K.Jayasinghe) ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

பெரும்போகச் செய்கைக்கான அவசர மற்றும் அத்தியாவசிய தேவையாகக் கருதி விவசாய இரசாயனங்கள் மற்றும் தாவர போசாக்கு பொருட்கள் என்பன இறக்குமதி செய்ய  அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக இராசாயன உர வகைகளின் பயன்பாட்டை தடையும் செய்யும் பொருட்டு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் அதன்பின்னர் ஏற்பட்ட உர நெருக்கடியினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதையும் நிறுத்தினர்.

அதுமாத்திரமன்றி பல்வேறு போராட்டங்களிலும் விவசாயிகளும் எதிர்கட்சிகளும் ஈடுபட்டிருந்தன.

இதற்கிடையில், இதே நிலைமை நீடிக்குமாயின் அடுத்தாண்டு பெரும் பஞ்சம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்துஇ

இந்த நிலையிலேயே மீண்டும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...