Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஊழல் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஊடகவியலாளர்களை CIDக்கு அழைப்பது மானங்கெட்ட முயற்சியாகும்!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2021 • 12:12 PM

ஊழல் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஊடகவியலாளர்களை CIDக்கு அழைப்பது மானங்கெட்ட முயற்சியாகும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊழல் மோசடிகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர், குறித்த ஊழல் பேர்வழிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஊடவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்திருப்பதை கண்டிப்பதாக அறிக்கையொன்றின் மூலம் ஊடக அமைப்புகள் ஒன்றியம் கூறுகிறது.
எழுத்து அளவு:

பாவனையாளர்கள் சேவைகள் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தனவினால் வெள்ளைப் பூடு மோசடி உட்பட மோசடிகள் சம்பந்தமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், இந்தச் செய்தியை வெளியிட்ட லங்காதீப, திவைன, மற்றும் தி ஐலண்ட பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு அழைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாகக் கூறும் ஒன்றியம், இது, ஊழல் மோசடி பேர்வழிகளை பாதுகாப்பதற்காக மோசடிகள் வெளிப்படுத்தப்படுவதை தடுக்கும் மானங்கெட்ட முயற்சியாகுமெனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊடகப் சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, சுதந்திர ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீதா ரஞ்சனி, இலங்கை தொழில் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், இலங்கை முஸ்லிம் ஊடக மன்றத்தின் தலைவர் என்.எம்.அமீன், தமிழ் ஊடக மன்றத்தின் செயலாளர் கணபதிபிள்ளை சர்வானந்தா மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்துனில் உயங்கொட ஆரச்சி ஆகியவர்களின் ஒப்பத்துடனும், 6 ஊடக அமைப்புகளின் தலைமையிலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...