Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பரபரப்பான CID அலுவலகம்! 5ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான பெண்!

T

The Leader Desk

ஜனவரி 11, 2022 • 7:06 AM

பரபரப்பான CID அலுவலகம்! 5ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான பெண்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐந்தாவது மாடியில் உள்ள கழிவறையின் ஜன்னலில் இருந்து குதித்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
  • ராஜபக்ச முதியன்சாலாகே அப்சரா மெனிகே ராஜபக்ஷ என்ற 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
  • குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவு 01 இன் காவலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

ஐந்தாவது மாடியில் உள்ள கழிவறையின் ஜன்னலில் இருந்து குதித்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச முதியன்சாலாகே அப்சரா மெனிகே ராஜபக்ஷ என்ற 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் பன்னிபிட்டிய சேடகல நாமல் உயனை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவு 01 இன் காவலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கும் சங்கம் அமைத்து வங்கிகளில் கடன் பெற்று மீண்டும் அந்த கடன் சங்கத்தின் மூலம் கடன் வழங்கி இந்த மோசடி நடந்துள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

சிஐடி வரலாற்றில் பெண் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை.

நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட தொடம்பே முதலாளி!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் வரலாற்றில் முதல் கரும்புள்ளியாக 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஏ.வி.ரத்னபுரி கைது செய்யப்பட்டார். நான்காவது மாடியில் இருந்து பொடிஅப்புஹாமி கீழே விழுந்து இறந்தார்.

தொடம்பே முதலாலி என அழைக்கப்படும் இவர் 1966 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு இராணுவ சதிப்புரட்சியின் சந்தேக நபராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த மரணம் தற்கொலை என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் 4 வது மாடியில் இருந்து தள்ளப்பட்டதாக மாற்றுக் கருத்துக்கள் வெளிவந்தன. இன்றும் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்த செய்தி குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

அந்த மரணத்துடன் சமூகத்தில் 4 வது மாடி பற்றி பரபரப்பான விவாதம் ஏற்பட்டுள்ளதுடன் 4 வது மாடி குறித்து சமூகத்தில் அச்ச நிலையொன்று உருவாகியுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பரபரப்பான CID அலுவலகம்! 5ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான பெண்! | Tamil Leader | We Lead the Nation