Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

A9க்கு நெருக்கமாக சீனித் தொழிற்சாலை அமைக்க புது முயற்சி

T

The Leader Desk

நவம்பர் 18, 2023 • 3:19 AM

A9க்கு நெருக்கமாக சீனித் தொழிற்சாலை அமைக்க புது முயற்சி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதேச செயலாளர் பிரிவின் 'ஏ 9' பாதையோரத்துக்குச் சற்று நெருக்கமாகப் பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
  • வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் நயினாமடுப் பகுதியில் ஒரு சீனித் தொழிற்சாலை அமைக்க முதலீட்டு அமைச்சின் ஊடாக 200 ஹெக்டேயர் நிலத்துக்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாத்தியவள ஆய்வுகள் இடம்பெற்றன.
  • அத்தோடு அந்தப் பிரதேசம் வவுனியா நகரின் மத்தியில் இருந்து சுமார் 48 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதால், அங்கு சீனித்தொழிற்சாலை ஆரம்பிப்பதாயின் அப்பகுதியில் அதிக அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது என அறியவந்தது.
  • சீனித் தொழிற்சாலைத் தரப்பினரால் தற்போது கோரப்படும் பிரதேசம் 'ஏ 9' வீதியில் இருந்து ஆக 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
எழுத்து அளவு:

பிரதேச செயலாளர் பிரிவின் 'ஏ 9' பாதையோரத்துக்குச் சற்று நெருக்கமாகப் பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் நயினாமடுப் பகுதியில் ஒரு சீனித் தொழிற்சாலை அமைக்க முதலீட்டு அமைச்சின் ஊடாக 200 ஹெக்டேயர் நிலத்துக்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாத்தியவள ஆய்வுகள் இடம்பெற்றன.

இந்த ஆய்வில் நயினாமடுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மத்திய வகுப்புத் திட்டக் காணியின் அருகே ஆக இரு குளங்கள் மட்டுமே உள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டது.

அத்தோடு அந்தப் பிரதேசம் வவுனியா நகரின் மத்தியில் இருந்து சுமார் 48 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதால், அங்கு சீனித்தொழிற்சாலை ஆரம்பிப்பதாயின் அப்பகுதியில் அதிக அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது என அறியவந்தது.

இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இளமருதங்குளம், சேமமடு மற்றும் மாளிகை உள்ளடக்கிய முக்கோண வடிவிலான பகுதியில் சீனித் தொழிற்சாலையை அமைக்க 200 ஹெக்டேயர் நிலம் வழங்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்தால் வவுனியா நகரப் பிரதேச செயலகத்துக்கு இப்போது எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனித் தொழிற்சாலைத் தரப்பினால் பிரதேச செயலாளரிடம் கோரப்பட்டுள்ள நிலப் பகுதி வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள பிரதேசம் என்பதால் வவுனியா பிரதேச செயலாளர் அது தொடர்பில் வவுனியா மாவட்ட வனவளத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் என்று அறியவந்தது.

சீனித் தொழிற்சாலைத் தரப்பினரால் தற்போது கோரப்படும் பிரதேசம் 'ஏ 9' வீதியில் இருந்து ஆக 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

அத்தோடு சீனித் தொழிற்சாலையை அங்கு செயற்படுத்துவதற்கு வசதியாக அந்தப் பிரதேசத்தில் அருகருகே ஐந்து குளங்கள் காணப்படுகின்றமையும், வவுனியா நகரில் இருந்து ஆக 22 கிலோ மீற்றர் தூரத்தில் அந்தப் பிரதேசம் உள்ளமையும் முக்கிய விடயங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நன்றி-முரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...