Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

99 ரூபாய் ஜீவன சக்தி காப்புறுதி திட்டம்! மலையக மக்கள் பேராதரவு

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2023 • 4:30 PM

99 ரூபாய் ஜீவன சக்தி காப்புறுதி திட்டம்! மலையக மக்கள் பேராதரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை செயற்படுத்தி வரும் அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.
  • காப்புறுதி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும்.
  • குளவிக்கொட்டு உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் - அங்கு தங்கி இருந்து சிகிச்சைபெற்றால் நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும்.
  • இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த வேண்டும்.
எழுத்து அளவு:

அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர். 

அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை செயற்படுத்தி வரும் அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெருந்தோட்டதுறையில் தொழில் நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே குறித்த காப்புறுதி திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளருக்கும், அவரின் துணை மற்றும் இரு பிள்ளைகளுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும்.

காப்புறுதி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும். 23 வகையான நோய்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது.

குளவிக்கொட்டு உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் - அங்கு தங்கி இருந்து சிகிச்சைபெற்றால் நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும். இதர கொடுப்பனவும் வழங்கப்படும்.

இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த வேண்டும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடகாலப்பகுதியில் நிதி அறவிடப்படும்.

தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிலாளர்கள் ஏனையோரை தங்கியிருக்கும் நிலையை நிவர்த்தி செய்வது திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல தோட்டத்தில் உள்ளவர்களும், தோட்ட அதிகாரிகளும் இந்த காப்புறுதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 99 ரூபாதான் ஆரம்பம், பொருளாதார தேவைக்கேற்ப காப்புறுதி திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

நாளொன்றுக்கு எங்களுக்கு மூன்று ரூபா தான் செலவாகின்றது, ஆனால் தொழிலின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இது பெரும் உதவியாக இருக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல 99 ரூபாவில் இருந்து திட்டம் உள்ளது, உப தொழில்கள்மூலம் வருமானம் பெறக்கூடியவர்கள் மேலதிக வசதிகளை பெறும் வகையிலும் காப்புறுதி திட்டத்தை வடிவமைத்துக்கொள்வதற்கான வசதியும் உள்ளது.

இன்று ஒரு சிகரெட்கூட 120 ரூபாவுக்கு மேல்தான் விற்கப்படுகின்றது, வெற்றிலை பொதியொன்றின் விலைகூட 50 ரூபா, ஆனால் 99 ரூபாவுக்கு காப்புறுதி கிடைப்பது எவ்வளவு நல்லம்? உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய விடயங்களுக்குகூட பணத்தை செலவிடுபவர்கள், காப்புறுதிக்கு 99 ரூபா செலவிடமாட்டார்களா என்ன என்று தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, தோட்ட அதிகாரிகள், தோட்ட இளைஞர்கள், சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பலரும் இத்திட்டத்தை ஆதரித்து, அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

99 ரூபாய் ஜீவன சக்தி காப்புறுதி திட்டம்! மலையக மக்கள் பேராதரவு | Tamil Leader | We Lead the Nation