இலங்கை தேர்தல் வரலாற்றில் இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் சிறப்புமிக்கதாக அமைவது தேர்தல் கால வன்முறைகள் மிகக் குறைந்த மட்டத்தில்

இடம்பெற்றிருப்பதன் காரணத்தினாலாகும்.

பெப்ரல் அமைப்பு 2019ம் ஆண்டு செப்டெம்பர் 27ம் திகதியிலிருந்து நவம்பர் 13ம் திகதி மாலை 4.30 மணி வரையிலான தேர்தல் பிரசார காலம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய எவ்வித கொலைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை.

இதற்கு மேலாக கடுமையான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சட்டங்களை மீறியமை தொடர்பான 68 சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அவற்றுள் கடுமையான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது 15 மாத்திரமேயாகும்.

அந்த அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களோடு ஒப்பிடும் போது இம்முறை தேர்தல் கால வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிடக் கூடிய வகையில் குறைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி பீபீசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி