நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக மைத்திரிபால சிரிசேனா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச்

செயற்படுவார் என ஸ்ரீ.ல.சு.கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் பெரும்பான்மையினர் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எவ்விதத்திலும் ஆதரவை வழங்கக் கூடாது என கடும் அழுத்தங்களை வழங்கியிருந்த நிலையில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு தமது பதவி மற்றும் சலுகைகளுக்காக மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்க மேற்கொண்ட தீர்மானத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தேர்தல் காலத்தில் நடுநிலையாக இருப்பதற்குத் தீர்மானித்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக விலகி பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா செயற்படுவார் என பதில் தலைவர் குறிப்பிட்டார்.

இதன் போது அவர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமையகத்திலிருந்தே கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்றும் பதில் தலைவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி