தனது பிரஜா உரிமை தொடர்பான சான்றிதழ் எனக் கூறி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல்கள் திணைக்களத்தில் பேப்பர் ஒன்றைக் காட்டியது உண்மையே
என்றாலும், அதில் அடங்கியிருந்த விடயங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் ஆணைக்குழு அக்கரை காட்டவில்லை என தோ்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்ட சான்றிதழ் தேர்தல்கள் திணைக்களத்திற்கு காட்டப்பட்டுள்ளது என்றும், அதனை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சில தினங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பொன்றில் கூறிய கருத்து தொடர்பில் கேட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோத்தாபய ராஜபக்ஷ, சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் மற்றொரு சட்டத்தரணியும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்ததாகவும், அதன் போது குடியுரிமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ கூறியதாகவும், அவர் ஒரு பேப்பரைக் காட்டிய போதிலும் அதனை ஏற்றுக் கொள்வது அல்லது பெற்றுக் கொள்வதை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அந்தப் பேப்பர் தொடர்பில் ஆர்வத்தைக் காட்டவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன் போது கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி