Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அர்மீனியா-அசர்பைஜான் இடையே மீண்டும் மோதல்! 8 வீரர்கள் பலி

T

The Leader Desk

நவம்பர் 17, 2021 • 4:56 PM

அர்மீனியா-அசர்பைஜான் இடையே மீண்டும் மோதல்! 8 வீரர்கள் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த போரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • இந்நிலையில், நாக்ரோனா-கராபாக் பகுதியில் உள்ள எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே நேற்று திடீரென மோதல் வெடித்தது.
  • இருநாட்டு வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
  • இதில், 7 பேர் அசர்பைஜான் வீரர்கள் எனவும், ஒருவர் அர்மீனிய வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அந்த போரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது.

போர் முடிவுக்கு வந்த போதும் அசர்பைஜான் - அர்மீனியா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இருநாட்டு பாதுகாப்பு படையினரும் எல்லையில் எதிர்தரப்பினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் இருநாட்டு வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், நாக்ரோனா-கராபாக் பகுதியில் உள்ள எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே நேற்று திடீரென மோதல் வெடித்தது. அர்மீனிய மற்றும் அசர்பைஜான் ராணுவத்தினர் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இருநாட்டு வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், 7 பேர் அசர்பைஜான் வீரர்கள் எனவும், ஒருவர் அர்மீனிய வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோதலின் போது தங்கள் நாட்டு வீரர்கள் 24 பேர் காணவில்லை எனவும், 13 அசர்பைஜான் வீரர்களை பிடித்துவைத்துள்ளோம் எனவும் அர்மீனியா தெரிவித்துள்ளது.

அசர்பைஜான் - அர்மீனியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில் இந்த மோதல் இருநாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.    

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...