Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரஷிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2021 • 6:05 PM

ரஷிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெர்ம் நகரில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம்.
  • சம்பவ இடத்திலேயே 8 பேர் பலி ஆனாலும் அந்த மாணவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார்.
  • இதில் சுமார் 20 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
  • அதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
எழுத்து அளவு:

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு

ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெர்ம் நகரில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம். இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகம் காலை வழக்கம் போல் இயங்க தொடங்கியது. பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்த, மாணவ-மாணவிகள் அதனை கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்தனர்

அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மற்றும் பேராசிரிரியர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதை கண்டு பதறிப்போன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.சில மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று, கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இன்னும் சிலர் வகுப்பறைகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடினர்.

சம்பவ இடத்திலேயே 8 பேர் பலி

ஆனாலும் அந்த மாணவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார். இதில் சுமார் 20 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது

இதற்கிடையில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்ததுக்கு விரைந்து சென்ற போலீசார் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடாத போலீசார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரஷிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! | Tamil Leader | We Lead the Nation