Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

77 வயதாகும் துளசி 30,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு சாதனை!

T

The Leader Desk

நவம்பர் 9, 2021 • 3:39 PM

 77 வயதாகும் துளசி 30,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு சாதனை! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
  • இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது .
  • இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .
  • இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவர்.77 வயதாகும் துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் 30,000 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
எழுத்து அளவு:

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .

இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவர்.77 வயதாகும் துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர்  30,000 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கடந்த ஆறு தசாப்தங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

1944 ஆம் ஆண்டு  ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் துளசி கவுடா. காடுகளின் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய அவரது விரிவான அறிவை கொண்டு இருப்பதால் "காடுகளின்  கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும்  அழைக்கப்படுகிறார்.

நேற்று நடந்த விழாவில் விருது வழங்குவதற்காக  இவரது பெயர் அழைக்கபட்டபோது ஜனாதிபதியை நெருங்கிய துளசி கவுடா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கைகூப்பி மரியாதை செலுத்தினார்  . பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் , அமித்ஷாவும் அவரை நோக்கி கைகூப்பி மரியாதை செலுத்தினர் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...