Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

75,000 சுற்றுலாப் பயணிகள் - டட்லியின் ஹோட்டலுக்கு உதயங்கவின் விளம்பரம்

T

The Leader Desk

ஜனவரி 31, 2022 • 9:01 AM

75,000 சுற்றுலாப் பயணிகள் - டட்லியின் ஹோட்டலுக்கு உதயங்கவின் விளம்பரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனவரி முதலாம் திகதி முதல் 29ம் திகதி வரை 76,538 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
  • இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் இ ருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
  • இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும் வந்துள்ளனர்.
  • இங்கிலாந்தில் இருந்து 6,929 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 4,902 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 3,337 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
எழுத்து அளவு:



ஜனவரி முதலாம் திகதி முதல் 29ம் திகதி வரை 76,538 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் இ ருந்து 12,368 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 11,028 பேரும், உக்ரைனில் இருந்து 7,427 பேரும் வந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 6,929 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 4,902 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 3,337 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய அறிக்கையின்படி, போலந்து, அவுஸ்திரேலியா, மாலைதீவு, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். அந்த ஆண்டு ஜனவரியில் 1,682 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வந்தனர்.

இந்த ஆண்டு 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அதிகரிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே குறுகிய, நடுத்தர, நீண்ட கால வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் ஓமிக்ரோன் பிறழ்வு பரவியதன் மூலம், உலகளாவிய சுற்றுலாத்துறை மீண்டும் தடைபட்டுள்ளதாகவும், ஆனால் இலங்கை தடுப்பூசி திட்டத்தினால், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை மீது கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

உத்தேச அமைச்சரவை மாற்றத்தின் கீழ் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நல்ல நேரம் இல்லாத காரணத்தால் அந்த மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாட்டினரை நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி உனவடுன பிரதேசத்திலுள்ள டட்லி சிறிசேனவிற்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...