Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அசாம் ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் 70 பேர் மாயம்!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2021 • 4:52 AM

அசாம் ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் 70 பேர் மாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படகு புறப்படும் நேரம் நெருங்கியபோது, மற்றொரு படகு வந்தது.
  • அப்போது 2 படகுகளும் மோதிக்கொண்டன.
  • அதனால் படகில் இருந்த 120 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
  • தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை மீட்புப்பணியில் ஈடுபட்டன.
எழுத்து அளவு:

படகு புறப்படும் நேரம் நெருங்கியபோது, மற்றொரு படகு வந்தது. அதை நிறுத்த இடம் அளிப்பதற்காக, ‘மா கமலா’ படகு சற்று நகர்ந்தது. அப்போது 2 படகுகளும் மோதிக்கொண்டன. ‘மா கமலா’ படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

அதனால் படகில் இருந்த 120 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். பெரும்பாலானோரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை மீட்புப்பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் மீட்புப் பணியில் ராணுவம் இன்று இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு பெண் ஆசிரியை உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மூன்று பேர் ஜோர்ஹட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதி 70 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. படகில் கார்கள், ஆட்டோக்கள் ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன. அவையும் ஆற்றுக்குள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப்பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டுள்ளதாகவும், நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, பணியில் அலட்சியம் காட்டியதாக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அசாம் ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் 70 பேர் மாயம்! | Tamil Leader | We Lead the Nation