Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வெருகல் பிரதேசத்தில் 600 ஏக்கர் காணி விடுவிப்பு!

T

The Leader Desk

நவம்பர் 6, 2021 • 4:18 PM

வெருகல் பிரதேசத்தில் 600 ஏக்கர் காணி விடுவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(5) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில அத்துகோரல (Kapila Athukorala) தலைமையில் நடைபெற்றது.
  • யுத்தத்திற்கு முன்னர் தாம் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கெயை மேற்கொண்டு வந்ததாகவும், நடைபெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசங்களில் பயிர் செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது.
  • மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இணங்க அப்பிரதேசங்களில் போக பயிர்செய்கை செய்வதற்குரிய ஏற்பாட்டின் கீழ் காணி விடுவிப்பு நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(5) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில அத்துகோரல (Kapila Athukorala) தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இணங்க அப்பிரதேசங்களில் போக பயிர்செய்கை செய்வதற்குரிய ஏற்பாட்டின் கீழ் காணி விடுவிப்பு நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தியை அதிகரித்து நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தக் கூடியதாக அமையும்.

பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் உற்பத்தியை மேற்கொண்டு நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தினுடைய மூல நோக்கங்களில் ஒன்றாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுற்றாடலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாத்து பிரதேசத்தில் இருக்கக்கூடிய பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க கூடியதாக அமையும் என்று இதன் போது நாடளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் தாம் இப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கெயை மேற்கொண்டு வந்ததாகவும், நடைபெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசங்களில் பயிர் செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக இப்பிரதேசம் கைவிடப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பயிர் செய்வதற்கான அனுமதியை உரிய அதிகாரிகளிடம் கோரிய போதும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறவில்லை.

இது தொடர்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டு வந்ததாகவும் மிக குறுகிய காலத்தில் பயிர் செய்வதற்காக விடுவித்து பயிர் செய்வதற்கான அனுமதியை வழங்கியமை குறித்து பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் மொஹமட் கனி (Mohamed Gani) , பிரதேச அரசியல் தலைமைகள் உரிய பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...