Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது இடம் பெற்ற வான்வழி தாக்குதலில் 56 பேர் பலி!

T

The Leader Desk

ஜனவரி 10, 2022 • 8:22 AM

எத்தியோப்பியாவில் அகதிகள் முகாம் மீது இடம் பெற்ற வான்வழி தாக்குதலில் 56 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டைக்ரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்கக்கோரி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
  • அப்போது டெடிபிட் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.
  • இந்த வான்வழிதாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 56 பேர் கொல்லப்பட்டனர்.
எழுத்து அளவு:

டைக்ரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்கக்கோரி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். அதே வேளையில் அந்த நாட்டு ராணுவம் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் டைக்ரே பிராந்தியத்தின் மீது படையெடுத்து, அதை அரசின் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகிறது.

இதற்காக டைக்ரே பிராந்தியத்தின் மீது தரை வழியாகாவும், வான் வழியாகவும் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி மக்களே அதிக அளவில் பலியாகினர்.

இதற்கிடையில் டைக்ரே பிராந்தியத்தில் நடந்து வரும் இந்த போர் காரணமாக அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதரத்தை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் டைக்ரே பிராந்தியத்தில் டெடிபிட் என்கிற நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், உள்நாட்டுப்போரில் வீடுகளை இழந்த மக்களுக்கான அகதிகள் முகமாக செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டைக்ரே பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படைகள் வான்வழி தாக்குதலை நடத்தியது. அப்போது டெடிபிட் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதில் அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளிக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த வான்வழிதாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் பலரை சிறையில் இருந்து விடுவிப்பதாக அரசு அறிவித்த நிலையில், இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த வான்வழி தாக்குதல் குறித்து எத்தியோப்பியா ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...