1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகராகப் போட்டியிடுவாராயின்

தான் ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகராகப் போட்டியிடாமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நகானந்த கொடிதுவக்கு நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் முன்வைத்துள்ள  அரசியலமைப்புத் திருத்த வரைபை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதாக ஞானசார தேரர் நாட்டின் முன் வாக்குறுதி வழங்க வேண்டும் என்பதே நகானந்த தொடிதுவக்குவின் நிபந்தனையாகும்.

நேற்று திங்கட்கிழமை கொழும்பு OPA ல் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள சிலரை அழைத்து “விசந்தும” என்ற அமைப்பு நேற்று கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இந்த கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், நாகனந்த கொடிதுவக்கு மற்றும் ரொஹான் பல்லேவத்த போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துள்ளது.

ஞானசார தேரரை விடுவிப்பதற்கு

இந்தக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதாரண, ஞானசார தேரருக்கு அநீதியான முறையில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த வேளையில் நாகனந்த கொடிதுவக்கு தேரருக்காக எந்தவித ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.

இதன் போது பதிலளித்த கொடிதுவக்கு, ஞானசார தேரர் குற்றமிழைத்திருந்த காரணத்தினால் ஞானசார தேரருக்கு உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறினார்.  ஞானசார தேரர் உடனடியாக இதற்குப் பதலளித்ததோடு, அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

எவ்வாறாயினும் ஞானசார தேரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் நிபந்தனைகளின் கீழ் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாகனந்த கொடிதுவக்கு இணக்கத்தைத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி