Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு!

T

The Leader Desk

ஜனவரி 4, 2022 • 2:45 AM

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
  • # 666,480 ஓய்வூதியகாரர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 மேலதிக கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • # சமுர்த்தி பெறுனர்களுக்கான மாதாந்த கொடுப்பனவான 3500 ரூபாவுக்கு மேலதிக கொடுப்பனவாக 1000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  • # விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லை ரூ.75 கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

# 666,480 ஓய்வூதியகாரர்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 மேலதிக கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

# சமுர்த்தி பெறுனர்களுக்கான மாதாந்த கொடுப்பனவான 3500 ரூபாவுக்கு மேலதிக கொடுப்பனவாக 1000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

# விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல்லை ரூ.75 கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

# இதேவேளை, 20 பேர்ச் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

# ஒரு ஏக்கருக்கு குரைவாகவும் 20 பேர்ச்சிற்கு அதிகமாக உள்ள வீட்டுத்தோட்டங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு அதே தொகையை இரு தரப்பினருக்கும் திரும்பிச் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மலையக மக்களின் நன்மை கருதி ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை மா மாதாந்தம் 80 ரூபா என்ற விலையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் மொத்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

# இதனிடையே, மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கு சிறப்பு கொடுப்பனவாக ரூ.5,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பசிலை குழப்பமடைய வைத்த கெஹலிய மற்றும் ரோஹித!

நிவாரணப் பொதி தொடர்பில் முடிவெடுப்பதற்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு சற்று முன்னர், அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியை அணுகி, தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறி கூட்டத்திலிருந்து வெளியேற அனுமதி கோரினார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஓடிவந்து, அமைச்சர் கம்மன்பில நிவாரணப் பொதியை அறிவிப்பதற்கு முன்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி உரிய தீர்மானங்களை அறிவிக்குமாறு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் தனது அமைச்சுக்குள் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி அதற்கமைய அமைச்சரவை முடிவுகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! | Tamil Leader | We Lead the Nation