Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பெற்றோலிய பொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2022 • 1:45 PM

பெற்றோலிய பொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை திறைசேரி செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல இலங்கை சார்பாகவும், எக்ஸிம் வங்கியின் பிரதம பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரி இந்தியா சார்பாகவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
  • இலங்கையால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது.
  • இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இலங்கை நிதியமைச்சர் சில் ராஜபக்ஷவுக்கும் இடையில் 2022 ஜனவரி 15 அன்று நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில இந்த முக்கிய ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
  • கொவிட்-19 இற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் இலங்கையின் மிகவும் நெருக்கமான பங்காளியாகவும் அதேநேரம் நீண்டகால உறவைக்கொண்டிருக்கும் பங்காளியாகவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில், பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உடன்படிக்கை ஒன்றில், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் (எக்ஸிம் வங்கி) இலங்கை அரசாங்கமும் 2022 பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கை திறைசேரி செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல இலங்கை சார்பாகவும், எக்ஸிம் வங்கியின் பிரதம பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரி இந்தியா சார்பாகவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இலங்கை நிதியமைச்சர் சில் ராஜபக்ஷவுக்கும் இடையில் 2022 ஜனவரி 15 அன்று நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில இந்த முக்கிய ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் இலங்கையின் மிகவும் நெருக்கமான பங்காளியாகவும் அதேநேரம் நீண்டகால உறவைக்கொண்டிருக்கும் பங்காளியாகவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் கடனுதவி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை நமது இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதொரு விடயமாக காணப்படுவதுடன் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி ஆதரவு இந்தியாவால் வழங்கப்பட்டமையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

2021 டிசம்பரில் நிதியமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களிற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதரவுடன் இலங்கைக்கான ஒட்டுமொத்த இந்திய அபிவிருத்தி உதவித் திட்டங்கள் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SL Ind

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெற்றோலிய பொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி | Tamil Leader | We Lead the Nation