Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சர்வதேச தடையால் இலங்கை கிரிக்கெட்டுக்கு 50 மில். டொலர் இழப்பு: ஷம்மி சில்வா

T

The Leader Desk

நவம்பர் 11, 2023 • 2:25 PM

சர்வதேச தடையால் இலங்கை கிரிக்கெட்டுக்கு 50 மில். டொலர் இழப்பு: ஷம்மி சில்வா   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
  • இலங்கைக்கான தடையை ஐசிசி நீக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 50 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்.
  • சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று (11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • “அவரே இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்தார்.
எழுத்து அளவு:

ஏற்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

"அரசியல்வாதி ஒருவரால்தான் நாட்டில் கிரிக்கெட் இல்லாமல் போகப் போகிறது. ஒரு தனி மனிதன் பொய் சொல்கிறான். மற்றவர்கள் என்ன என்று பார்க்காமல் ஆம் போடுகிறார்கள். இலங்கைக்கான தடையை ஐசிசி நீக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 50 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை." என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும், இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியறிமைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலையீடே காரணம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பகிரங்கப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று (11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பிரதான காரணம் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு ஆகும்.

“அவரே இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களை தெரிவு செய்தார்.

“நாங்கள் தெரிவு செய்த பட்டியலில் இருந்து துஷ்மந்த சமீரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் இறுதி வீரர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு அவர் புதிய பெயர் பட்டியலை தயார் செய்தார்.

“இவரின் தலையீட்டால் பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுவும் இலங்கை அணி தோல்விக்கு ஒரு காரணம். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த தீர்மானம் எமக்கு கவலையை தருகிறது.

“இது குறித்து கலந்துரையாட எதிர்வரும் 21ஆம் திகதி நான் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு செல்லவுள்ளேன். அந்தக் கலந்துரையாடலின் பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்வதேச தடையால் இலங்கை கிரிக்கெட்டுக்கு 50 மில். டொலர் இழப்பு: ஷம்மி சில்வா | Tamil Leader | We Lead the Nation