Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது!

T

The Leader Desk

ஜூலை 27, 2021 • 3:29 AM

உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் அமீரகம் மற்றும் ஏனைய உலக நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் ‘சோலார் இம்பல்ஸ் 2’ ஆகும்.
  • இந்த விமானம் உலக நாடுகளிடையே மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.இது கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி அபுதாபியில் இருந்து தனது உலக பயணத்தை தொடங்கியது.
  • இந்த விமானம் வானில் சராசரியாக 80 கி.மீ.
  • வேகத்திலும், அதிகபட்சமாக 140 கி.மீ.
எழுத்து அளவு:

உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம்

அமீரகம் மற்றும் ஏனைய உலக நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் ‘சோலார் இம்பல்ஸ் 2’ ஆகும். இந்த விமானம் உலக நாடுகளிடையே மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.இது கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி அபுதாபியில் இருந்து தனது உலக பயணத்தை தொடங்கியது. இந்த விமானம் வானில் சராசரியாக 80 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது.

இறுதி பயணம்

மேலும் இந்த விமானத்தால் அதிகபட்சமாக சராசரியாக 8 ஆயிரம் அடி முதல் 39 ஆயிரம் அடி உயரம் வரை வானில் பறக்கக்கூடியது. இந்த விமானத்தில் மின்சக்தியால் இயங்கும் மோட்டார்களைத் தவிர வேறு எந்த மாற்று எரிசக்தியாலும் இயக்க முடியாது.இதற்காக இதன் பிரமாண்ட இறக்கைகளில் 17 ஆயிரம் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இந்த விமானத்தை ஒருவர் மட்டுமே இயக்க முடியும். இதை ஆண்ட்ரே போர்ச்பெர்க் (வயது 63) மற்றும் பெட்ராண்ட் பிக்கார்டு (68) ஆகிய 2 விமானிகள் ஒருவர் மாற்றி ஒருவர் இயக்கினார்கள். இந்த விமானத்தின் இறுதி பயணத்தை விமானி பெட்ராண்ட் பிக்கார்டு இயக்கினார்.

அபுதாபியில் தரையிறங்கியது

இந்த விமானம் உலகை சுற்றி கடைசியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 13-ந் திகதி எகிப்து நாட்டில் அபுதாபி வருவதற்காக தரை இறங்கியது. ஆனால் விமானி பிக்கார்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாலும், சவுதி அரேபியாவில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாறுபாடு காரணமாகவும் உடனே அங்கிருந்து புறப்பட முடியாமல் இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.அதன் பிறகு அனைத்து தடங்கல்களையும் கடந்து 2016-ம் ஆண்டு ஜூலை 26-ந் திகதி அமீரக நேரப்படி அதிகாலை 3.28 மணிக்கு கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த பயணத்தில் 48 மணி நேரம் தொடர்ந்து எந்த எரிபொருளின் உதவி இல்லாமல் வானில் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து வெற்றிகரமாக அபுதாபி அல் பத்தீன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. தற்போது வெற்றிகரமாக 5 ஆண்டுகள் தனது பயணத்தை நிறைவு செய்து உள்ளது.

இது குறித்து அந்த விமானத்தை இயக்கிய விமானி பிக்கார்டு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

திறன்மிக்க தொழில்நுட்பங்கள்

5 ஆண்டுகளுக்கு முன் நானும், எனது நண்பர் போர்ச்பெர்க் இருவரும் இந்த விமானத்தை இயக்கினோம். இது உலகளாவிய விமானமாக தொழில்நுட்பத்தின் உச்சத்தை காட்டுவதாக உள்ளது.தூய்மையான மற்றும் திறன்மிக்க தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. புகையில்லாமல், சத்தமில்லாமல் பறப்பது எவ்வளவு பெரிய நிகழ்வு என்பதை இப்போது நினைவூட்டுவதாக உள்ளது.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது! | Tamil Leader | We Lead the Nation