Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாளில் கெட்ட வார்த்தை!

T

The Leader Desk

ஜூலை 24, 2025 • 1:51 AM

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாளில் கெட்ட வார்த்தை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அச்சிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
  • கடந்த 22ம் திகதி இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த வினாத்தாளை பெற்றுக்கொண்ட அதிபர்கள் தங்களது பாடசாலைகளில் பரீட்சையை நடாத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:

அச்சிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22ம் திகதி இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து மற்றும் அச்சுப் பிழையினால் தாமும் மாணவ மாணவியரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் வலயக் கல்வி காரியாலயத்தினால் இந்த பரீட்சை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளை பெற்றுக்கொண்ட அதிபர்கள் தங்களது பாடசாலைகளில் பரீட்சையை நடாத்தியுள்ளனர்.

பரீட்சையின் போது மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் இது குறித்து தேடிப் பார்த்த போது வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர்கள் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட புதிய வினாத்தாள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாளில் கெட்ட வார்த்தை! | Tamil Leader | We Lead the Nation