Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுபுள்ளி வெளியானது

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 3:42 AM

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுபுள்ளி வெளியானது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி சிங்கள மொழிமூலமான சித்தி புள்ளிகளில் கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி உட்பட சில மாவட்டங்களுக்கான புள்ளிகள் 154ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று தமிழ் மொழிமூலம் கொழும்பு உட்பட சில மாவட்டங்களுக்கு 147 மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 145 என்ற ரீதியில் புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) வெளியாகின.
  • இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இதன்படி சிங்கள மொழிமூலமான சித்தி புள்ளிகளில் கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி உட்பட சில மாவட்டங்களுக்கான புள்ளிகள் 154ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழ் மொழிமூலம் கொழும்பு உட்பட சில மாவட்டங்களுக்கு 147 மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 145 என்ற ரீதியில் புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) வெளியாகின.

இந்த பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையிலேயே, தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

இந்த பரீட்சைக்காக 33,7591 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றது.

இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்  நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

23-655672bb5ca63.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...