Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மேலும் 5 பேருக்கு மரணத் தண்டனை அறிவிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2023 • 2:55 AM

மேலும் 5 பேருக்கு மரணத் தண்டனை அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
  • ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக் கப்பலில் 152 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கடத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • மீன்பிடி கப்பலில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு தலா 25 கிலோ எடையுள்ள 08 பைகளில் போதைப்பொருள் தொகையை கடத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
  • பின்னர் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்ததோடு, தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாமல் பண்டார பலாலே, பிரதிவாதிகளுக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக் கப்பலில் 152 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கடத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீன்பிடி கப்பலில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு தலா 25 கிலோ எடையுள்ள 08 பைகளில் போதைப்பொருள் தொகையை கடத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இரத்மலானை பகுதிக்கு அண்மித்த கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​குறித்த சந்தேக நபர்களின் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்ததோடு, தீர்ப்பை அறிவித்த நீதிபதி நாமல் பண்டார பலாலே, பிரதிவாதிகளுக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன் ஏதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி கேட்டுள்ளார்

இதன்படி, குற்றவாளிக் கூண்டில் இருந்து தனது வாக்குமூலத்தை முன்வைத்த முதலாம் பிரதிவாதி, எந்தவிதமான தண்டணை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஏனைய நான்கு பிரதிவாதிகளையும் விடுதலை செய்யுமாறு தெரிவித்தார்.

மற்ற நான்கு பிரதிவாதிகளும் தாங்கள் அப்பாவி மீனவர்கள் என்றும் இந்தக் குற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

அனைத்து விடயங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...