Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2023 • 3:17 PM

46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்ச்செய்கை வயல்கள் தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தற்போதைய நிலையில் மதிப்பீடு செய்து வருகிறது.
  • அதன்படி நேற்றைய தினம் (21) வரையில் ஏற்பட்ட பயிர் சேதத்தின் அளவு குறித்த நாளாந்த அறிக்கையை இன்று (22) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சபை வழங்கியுள்ளது.
  • அதன்படி, நேற்றைய (21) நிலவரப்படி சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு 46,904.54 ஏக்கராகும்.
  • மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆகும்.
எழுத்து அளவு:

அமைச்சு தெரிவித்துள்ளது.

வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்ச்செய்கை வயல்கள் தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தற்போதைய நிலையில் மதிப்பீடு செய்து வருகிறது.

அதன்படி நேற்றைய தினம் (21)  வரையில் ஏற்பட்ட பயிர் சேதத்தின் அளவு குறித்த நாளாந்த அறிக்கையை இன்று (22) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சபை வழங்கியுள்ளது.

அதன்படி, நேற்றைய (21) நிலவரப்படி சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு 46,904.54 ஏக்கராகும்.

மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆகும்.

நேற்றைய (21) நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் அளவு 23,286 ஏக்கர் ஆகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உடவளவை வலயத்தில் பயிர்ச் சேதம் பதிவாகியுள்ள நிலையில்,  14,667.5 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5867எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசிடம் தற்போது நெல் மற்றும் அரிசிக்கான  கையிருப்பு இல்லாததாலும், தனியார் வசம் அதிகளவு அரிசி இருப்பு இருப்பதாலும், அரிசியின் விலை எதிர்வரும் காலங்களில் உயர வாய்ப்புள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.  

அரிசியின் விலை உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நுகர்வோருக்கு அறிவிக்க அமைச்சரவை நடவடிக்கை எடுக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...