Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தம்

T

The Leader Desk

நவம்பர் 24, 2023 • 7:12 AM

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
  • இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
  • மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
  • இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 40 நாட்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது.

நீண்ட நாட்களாக போர் நடைபெறுவதால், காசாவில் உள்ள மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை 10 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருப்பினும், இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. அதேநேரம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்ப பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ‘‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார். தற்போது 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை ஹமாஸ் அமைப்பும் வரவேற்றுள்ளது.

50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதேவேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...