Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

குழந்தையை அரவணைத்தபடி மனித எலும்புக்கூடு; செம்மணியில் மனதை உருக்கும் சம்பவம்!

T

The Leader Desk

ஜூலை 31, 2025 • 2:50 AM

குழந்தையை அரவணைத்தபடி மனித எலும்புக்கூடு; செம்மணியில் மனதை உருக்கும் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
  • சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து நேற்றையதினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • நேற்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றையதினம் இடம்பெற்றன.
எழுத்து அளவு:

குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து நேற்றையதினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய எலும்பு தொகுதியானது அரவணைக்கப்பட்ட நிலையில் குறித்த எலும்புத் தொகுதிகள் காணப்படுகின்றன.

அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வரையான காலப்பகுதியில் செம்மணியில் 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றையதினம் இடம்பெற்றன.

இந்நிலையில் இன்றையதினம் 4 புதிய எலும்பு தொகுதிகள் அகழ்வு பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்றையதினம் மூன்று மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...