Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அதானியுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தைத் தொடராது!

T

The Leader Desk

மார்ச் 31, 2025 • 4:40 AM

அதானியுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தைத் தொடராது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாகக் கூறியுள்ளார்.
  • தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், முன்னைய அரசாங்கம், அதானியுடன் ஒரு அலகுக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் வீதத்திற்கு ஒப்புக்கொண்டது.
  • எனினும், வேறு ஒரு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தம் ஒரு அலகுக்கு 4.57 சென்ட் அமெரிக்க டொலர் என்பதாக அமைந்துள்ளது.
  • இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி, அதானி குழுமத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எப்படியாவது தொடருமாறு கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாகக் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், முன்னைய அரசாங்கம், அதானியுடன் ஒரு அலகுக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் வீதத்திற்கு ஒப்புக்கொண்டது.

எனினும், வேறு ஒரு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தம் ஒரு அலகுக்கு 4.57 சென்ட் அமெரிக்க டொலர் என்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி, அதானி குழுமத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எப்படியாவது தொடருமாறு கூறியுள்ளார்.

எந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அவர்கள் எங்கள் விலைக்கு ஒப்புக் கொள்ளும் வரை நாங்கள் ஒருபோதும் தொடர மாட்டோம் என்று அநுரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயற்சித்த பிறகு, இலங்கையில் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் முயற்சியில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம், கடந்த பெப்ரவரி மாதத்தில் அறிவித்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...